ஊர் ஊராக சுற்றும் மோடியை இதைச்செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் – ரசிகர்கள் விட்ட சேலஞ்ச்

Aus
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பாக இரு அணிகளுக்கும் இடையேயான டி20 பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Aus 1

- Advertisement -

இந்த போட்டியின் போது ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது. அது யாதெனில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 16-வது ஓவரில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தனது கையால் குளிர்பானங்களை ஏந்திக்கொண்டு மைதானத்தில் ஓடி வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும் போட்டியை காண வந்த ரசிகர்கள் அதனை ஆர்வத்தோடு கண்டுகளித்தனர்.

திடீரென்று பிரதமரே கையில் குளிர்பானத்தை ஏந்திக்கொண்டு வீரர்களுக்கு ஓடிச்சென்று வழங்கியதை கண்டு ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த செயலுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் மோடியை அவர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

Aus 2

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த செயலை கண்ட இந்திய ரசிகர்கள் இப்படி ஒரு பிரதமர் நமக்கு கிடைப்பாரா ? மோடியால் இதை செய்யமுடியுமா ? என்பது போன்று கமெண்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கும் மோடியை இதனை செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் என்றும் சேலஞ்ச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement