மோசமான பிட்ச். பலத்த அடி வாங்கிய ஆஸி வீரர்கள் . பாதியில் கைவிடப்பட்ட போட்டி – வைரலாகும் வீடியோ

Aus

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷேஃபீல்டு ஷீல்டு முதல் தர போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய அணிகளான விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆகிய அணிகள் இன்று விளையாடின. இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்தது.

அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே பந்துகள் சற்று அதிகமாக பவுன்ஸ் மற்றும் வேகமாக இருந்தன. பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நல்ல பவுன்ஸ் இருந்தாலும் இந்த போட்டியில் அதை விட எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருந்தது. மேலும் பந்துகள் கணிக்க முடியாத அளவிற்கு வேகமாக தாறுமாறாக எகிறியது.

அதிலும் குறிப்பாக பீட்டர் சிடில் வீசிய பந்தில் ஷான் மார்ஷ் முகத்தில் ஒரு அடி விழுந்தது. அதேபோல அதற்கடுத்து ஸ்டோனிஸ் பேட்டிங் செய்யும் போது அவரும் ஹெல்மட் மற்றும் நெஞ்சின் பக்கவாட்டு பகுதி என அடிவாங்கி வலியில் அலறினார். அதேபோல தொடர்ச்சியாக பந்துகள் பேட்ஸ்மேன்களை கண்டுபடி தாக்க செம்ம அடி வாங்கினார்கள்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாள் முதல் நாள் போட்டி 39 வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டன. அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற மோசமான ஆடைகளை சரிசெய்து போட்டிகளுக்கு முன்னால் சரியாக இருக்கிறதா என்று சோதனைக்கு பிறகே போட்டிகளை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.