மிரட்டிய இந்திய அணிக்கு ஐசிசி தண்டனை கொடுக்கனும்.. இல்லனா நாங்களும் செய்வோம்.. ஆஸி கோச் விமர்சனம்

Andrew McDonald
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதல் நாள் மாலையில் உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தினார். அதனால் அதிருப்தி அடைந்த இந்திய கேப்டன் பும்ரா என்னவாயிற்று? என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். அதற்கு ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அவரிடம் சில வார்த்தைகளை பேசினார்.

அவருக்கு பும்ராவும் பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார். அடுத்த சில பந்துகளில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அவரை திரும்பிப் பார்த்து வெறித்தனமாக முறைத்து பதிலடி கொடுத்தார். அப்படியே இந்திய அணியினரும் வெறித்தனமாக கத்தி கோன்ஸ்டஸ்க்கு பதிலடி கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா மிரட்டுனாங்க:

சொல்லப்போனால் முதல் போட்டியில் பும்ராவை அதிரடியாக எதிர்கொண்ட அவர் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது அதிரடியாக அடிப்பேன் என்று எச்சரித்தார். அப்போட்டியில் அவரை விராட் கோலி தோளில் இடித்து தள்ளியதற்காக ஐசிசி 20% போட்டி சம்பளத் தொகையை அபராதமாக விதித்தது. அப்படிப்பட்ட நிலையில் மீண்டும் போட்டியில் வம்பிழுத்ததாலேயே இந்திய அணியினர் கோன்ஸ்டஸ்க்கு அப்படி பதிலடி கொடுத்தார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்திய அணியினர் சாம் கோன்ஸ்டஸை மிரட்டும் வகையில் கொண்டாடியதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியினருக்கு ஐசிசி தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையென்றால் தாங்களும் அதே போன்ற பதிலடி சமயம் கிடைக்கும் போது கொடுப்போம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

தண்டனை கொடுங்க:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்ற வகையில் தான் கோன்ஸ்டஸிடம் அது பற்றி என்னுடைய பேச்சு வார்த்தை இருந்தது. இந்தியா நடந்து கொண்ட விதம் கொஞ்சம் மிரட்டலாக இருந்தது என்பது தெளிவாக தெரிந்தது. அதே சமயம் அது விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருப்பது தெளிவாக இருப்பதாலேயே எந்த தண்டனைகளும் கொடுக்கப்படவில்லை”

இதையும் படிங்க: 9 ரன்கள் வித்தியாசத்தில் சேவாக், கவாஸ்கர், முரளி விஜய்யின் சாதனையில் இணையும் வாய்ப்பை தவறவிட்ட – ஜெய்ஸ்வால்

“இதை ஐசிசி மற்றும் போட்டி நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் அவர்களிடம் விடுகிறேன். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அவர்கள் கருதினால் அது நாங்களும் அப்படி விளையாடுவதற்கான அளவுகோல் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இந்த நிலையில் கடைசி போட்டிகள் வென்று கோப்பையை தக்க வைக்க இந்திய அணி போராடி வருகிறது.

Advertisement