வெறியா வந்துருக்காங்க.. இளம் இந்திய வீரர்களின் அந்த அனுபவத்தை சமாளிக்க முடியல.. ஆஸி கேப்டன் வருத்தம்

Matthew Wade
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 208/3 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஜோஸ் இங்லீஷ் சதமடித்து 110, ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 0, ஜெய்ஸ்வால் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80 (42), இஷான் கிசான் 58 (39) ரன்களில் விளாசி வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

வெறியா வந்துருக்காங்க:
இறுதியில் பரபரப்பில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும் ரிங்கு சிங் தில்லாக நின்று 22* (14) ரன்களை விளாசி கடைசி பந்தில் சிக்ஸருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா 2023 உலக கோப்பை தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் ஜோஸ் இங்லிஷ் சதத்தால் 209 ரன்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தும் இஷான் கிசான், ரிங்கு சிங் போன்ற ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை கொண்ட இளம் இந்திய வீரர்களை சமாளிக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை தோல்வியால் இந்தியா தங்களை அடித்து நொறுக்கும் மனநிலையுடன் இத்தொடருக்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடைசியில் இது நல்ல போட்டியாக அமைந்தது. இங்லீஷ் நாங்கள் நினைத்த ஸ்கோரை அடிப்பதற்கு உதவினார். ஆனால் இந்தியர்கள் எங்கள் மீது கடினமாக அடிப்பதற்கு வந்தார்கள். இந்த இளம் இந்திய வீரர்கள் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நிறைய விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். நாங்கள் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு யார்கர்களை சரியாக போடவில்லை”

இதையும் படிங்க: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. அசத்திய ஸ்கை, இஷான் கிசான்.. பரபரப்பில் ரிங்கு சிங் தில்லாக ஆஸியை சாய்த்தது எப்படி?

“ஆனாலும் இது போன்ற சிறிய மைதானத்தில் சொல்வதை விட செய்வது கடினமாகும். இப்போட்டியில் எங்களுக்கு நிறைய நேர்மறையான பாடங்கள் கிடைத்தது. இங்லிஷ் க்ளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். என்று நினைக்கிறேன். எலிஸ் முக்கிய ஓவர்களை வீசி எங்களை ஃபைனல் ஓவர் வரை அழைத்துச் சென்றார். அதனால் கடைசி பந்து வரை இப்போட்டி சென்றது” என்று கூறினார்.

Advertisement