திட்டமிட்டபடி டி20 உலகக்கோப்பை நடைபெறுமா ? ஆஸ்திரேலிய நிர்வாகம் வெளியிட்ட தகவல் – பரபரப்பு செய்தி இதோ

Cup
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உலகெங்கிலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Ind vs Aus

- Advertisement -

இந்த கொரோனா வைரஸின் விளைவாக உலக நாடுகள் பலவற்றிலும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிரிக்கெட் போட்டி தொடர்கள் அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரும் ரத்து செய்யப்பட்டு தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாடு திரும்பினர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. மேலும் அந்தத் தொடரில் விளையாடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சன், நியூசிலாந்து வீரர் பெர்குசன் ஆகியோருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

Richardson

இந்த பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா தாக்கம் இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது இந்தியாவிலும் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருட இறுதியில் டி20 உலகக் கோப்பை நடைபெறுமா ? என்ற கேள்வியும் தற்போது எழுந்து உள்ளது.

- Advertisement -

ஏனெனில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தூரம் இருக்கும் என்று தெரியாததால் இதுபோன்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுமா ? என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வெளியான தகவலின்படி கூடிய விரைவில் அனைத்தும் சரியாகி விரைவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படும். டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாத இறுதியில் தான் தொடங்குகிறது என்பதால் அதற்குள் நிலைமை சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாயின் உலக கோப்பை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே திட்டமிட்டபடி டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement