RSA vs AUS : தெ.ஆ அணியை சொந்த மண்ணில் தூளாக்கிய ஆஸ்திரேலியா – புதிய கேப்டன் தலைமையில் வரலாற்று சாதனை வெற்றி

RSA vs AUS
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரின் முதலிரண்டு தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தெறிக்க விடும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றியது. குறிப்பாக 2021 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஆரோன் பின்ச் ஓய்வுக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

மறுபுறம் சொந்த மண்ணில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாபிரிக்கா குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்கு செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த நிலைமையில் டர்பன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவர்களில் தடுமாற்றமாகவே செயல்பட்டு 190/8 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

சாதனை வெற்றி:
அந்த அணிக்கு தெம்பா பவுமா 0, பிரட்ஸ் 5, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 25 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக டோனோவன் ஃபெராரியா அதிரடியாக 48 (21) ரன்களும் கேப்டன் மார்க்ரம் 41 (13) ரன்களும் ரீசா ஹென்றிக்ஸ் 42 (30) ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக சீன் அபௌட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு முதல் பந்திலேயே மேத்தியூ ஷார்ட் டக் அவுட்டானார்.

அதே போல அடுத்ததாக வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் 15 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் வெளுத்து வாங்கி மிக விரைவாக அரை சதம் கடந்தார். அவருடன் மிடில் அடரில் களமிறங்கி தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 1 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்ட ஜோஸ் இங்லீஷ் 42 (22) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக செயல்பட்டு சதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 91 (48) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (21) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவரிலேயே 191/5 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது. அதனால் பார்சுன் 2 விக்கெட்டுகளை எடுத்தும் தென்னாப்பிரிக்காவால் வெற்றி காண முடியவில்லை.

இதையும் படிங்க: இந்தியா நேபாள் அணிக்கெதிரான போட்டியின் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – ஜவகல் ஸ்ரீநாத்

அந்த வகையில் 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டி20 தொடரில் ஒய்ட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த ஆஸ்திரேலியா புதிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் தலைமையில் 2024 டி20 உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு மிரட்டலாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement