62 ரன்ஸ்.. மேக்ஸ்வெல் மிரட்டல் ஃபினிஷ்.. வார்னரின் வரலாற்று சாதனை சமன்.. கடைசி ஓவரில் தெ.ஆ’வை சாய்த்த ஆஸி

AUS vs RSA
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 2 போட்டிகளின் முடிவில் 1 – 1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்ற அத்தொடரின் 3வது போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கைர்ன்ஸ் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.45 துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கேப்டன் ஐடன் மார்க்ரம் 1, ரியன் ரிக்கல்டன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அடுத்து வந்த பிரிட்டோரியஸ் அதிரடி காட்ட முயற்சித்து 24 (15) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதே போல தேவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 53 (26) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

பிரேவிஸ் அசத்தல்:

குறிப்பாக கடந்தப் போட்டியில் சதத்தை அடித்த அவர் இப்போட்டியில் ஆரோன் ஹார்டி வீசிய 10வது ஓவரில் 6, 6, 6, ஒய்ட், 6 என 4 அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தினார். அவருடன் இணைந்து நிதானமாக விளையாடிய ஸ்டப்ஸ் 25 (23) ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் வேன் டெர் டுஷன் அதிரடியாக 38* (26) ரன்கள் எடுத்த உதவியுடன் தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 172/7 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக நாதன் எலிஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் ட்ராவிஸ் ஹெட் 18, ஜோஸ் இங்லிஷ் 0, கேமரூன் க்ரீன் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

மேக்ஸ்வெல் மிரட்டல் ஃபினிஷ்:

அதே போல டிம் டேவிட் 17 (9) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் அரை சதத்தை அடித்த மார்ஷ் 54 (37) ரன்களில் அவுட்டானார். அப்போது மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ஹார்டி 1, பென் ட்வார்சுய்ஸ் 1 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார்கள். ஆனால் மறுபக்கம் தொடர்ந்து போராடிய மேக்ஸ்வெல் அரை சதத்தை அடித்ததால் ஆஸ்திரேலியாவுக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

லுங்கி நிகிடி வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் 2, 4 அடித்த மேக்ஸ்வெல் 3, 4வது பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் 5வது ஃபுல் டாஸ் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் வாயிலாக பவுண்டரி விளாசிய அவர் 62* (36) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 19.5 ஓவரில் 173/8 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையும் படிங்க: சொந்த பொண்ணுக்கு செலவு பண்ணமாட்டாரு.. ஆனா அவளோட தோழி கும்பத்துக்கு.. ஷமி மீது – முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மேக்ஸ்வெல் 12வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற ஆஸ்திரேலியா வீரர் என்ற டேவிட் வார்னர் (தலா 12) வரலாற்று சாதனையை அவர் சமன் செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisement