AUS vs RSA : யுவியின் 16 வருட மாஸ் சாதனை உடைத்த மிட்சேல் மார்ஷ் – தெ.ஆ அணியை சொந்த மண்ணில் நொறுக்கிய ஆஸி மிரட்டல் வெற்றி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றதால் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் தென்னாபிரிக்கா நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் போராடி 164/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு ரீசா ஹென்றிக்ஸ் 3, வேன் டெர் டுஷன் 6, தேவால்டு ப்ரேவிஸ் 0, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 27 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 49 (38) ரன்களும் தெம்பா பவுமா 35 (17) ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக சீன் அபௌட், நாதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும் ஜேசன் பெரண்டாஃப் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:
அதை 165 ரன்களை சேசிங் செய்த ஆஸ்திரேலியா இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பது போல் அதிரடியாக விளையாடி வெறும் 14.5 ஓவரிலேயே தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 168/2 ரன்களை விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த அணிக்கு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 18 (17) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி விரைவாக அரை சதம் கடந்தார்.

அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த மற்றொரு தொடக்க வீரர் மேத்தியூ ஷார்ட் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 66 (30) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் எதிர்ப்புறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய மிட்சேல் மார்ஷ் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 79* (39) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை ஆஸ்திரேலியா வெல்வதற்கு உதவினார்.

- Advertisement -

முன்னதாக ஆரோன் பின்ச் ஓய்வு பெற்ற பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இத்தொடரின் முதல் போட்டியில் 92* ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் வாயிலாக இப்போட்டி நடைபெற்ற தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் இருக்கும் கிங்ஸ்மீட் மைதானத்தில் ஒரு சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இந்தியாவின் யுவராஜ் சிங் 16 வருட சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: கடைசி 22 மேட்ச்ல 10 விக்கெட் தானா? ஜடேஜாவிடம் உள்ள வீக்னஸ் – ரோஹித் சர்மா என்ன பண்ணுவாரோ பாவம்

இதற்கு முன் 2007 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற செமி ஃபைனலில் மாஸ் இன்னிங்ஸ் விளையாடிய யுவராஜ் சிங் 70 (30) ரன்களை விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்ததே முந்தைய சாதனையாகும். அந்த விரிவான பட்டியல்:
1. மிட்சேல் மார்ஷ் : 92*, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2023*
2. மிட்சேல் மார்ஷ் : 79*, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2023*
3. யுவராஜ் சிங் : 70, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007
4. விரேந்தர் சேவாக் : 68, இங்கிலாந்துக்கு எதிராக, 2007

Advertisement