29வது வருடம் 17 மேட்ச்.. உருக்கத்துடன் விடைபெற்ற வார்னர்.. பாகிஸ்தானை ஒய்ட்வாஷ் செய்து தெறிக்க விட்ட ஆஸி

AUS vs PAk David Warner
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதனால் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்படும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை மிகச் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 299 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 60, மிட்சேல் மார்ஷ் 54 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

விடைபெற்ற வார்னர்:
அதைத்தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 115 ரன்கள் மட்டும் எடுத்து வெற்றியை கைவிட்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4, நேதன் லயன் 3 விக்கெட்களை எடுத்தனர்.

இறுதியில் 130 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த டேவிட் வார்னர் 7 பவுண்டரியுடன் தனது கடைசி இன்னிங்ஸில் 57 ரன்களில் அவுட்டாகி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்து ஓய்வு பெற்றார். கடந்த 2011இல் அறிமுகமாகி 112 டெஸ்ட் போட்டிகளில் 8,786 ரன்களை 44.6 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள அவர் 26 சதங்கள் 37 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் விளாசி ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக செயல்பட்டு விடைபெற்று அவருக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி பிரியா விடை கொடுத்தனர். இறுதியில் மார்னஸ் லபுஸ்ஷேன் 62* ரன்கள் எடுத்ததால் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று 3 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டாலும் விராட் கோலிக்கு நோ சொல்லப்போகும் பி.சி.சி.ஐ – வெளியான தகவல்

மறுபுறம் கடைசியாக 1995இல் வென்ற பாகிஸ்தான் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 29வது 17வது போட்டியில் தோல்வியை சந்தித்தது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்து. இருப்பினும் பாகிஸ்தான் அணியினர் தங்களுடைய கையொப்பமிட்ட ஜெர்சியை வார்னருக்கு கொடுத்து வழி அனுப்பினர். அந்த வகையில் அனைவரது பாராட்டுக்கு மத்தியில் தம்முடைய மகள் மற்றும் மனைவியுடன் கட்டி அணைத்து ஆஸ்திரேலியாவுக்காக கடைசி முறையாக விளையாடி டேவிட் வார்னர் விடை பெற்றார்.

Advertisement