டி20 உ.கோ அணிகளை முதல் ஆளாக அறிவித்த ஆஸ்திரேலியா – முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்து

ENg vs AUs Steve SMith Ben Stokes
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து முன்னணி அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் வேகம், பவுன்ஸ் போன்ற அம்சங்கள் இருக்கும் என்பதால் அந்த சூழ்நிலையில் அழுத்தத்தை சமாளித்து அசத்தக்கூடிய தரமான வீரர்களை கண்டறியும் நோக்கில் உலகின் அனைத்து அணிகளும் அடுத்தடுத்த டி20 தொடரில் விளையாடி தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் 5 50 ஓவர் கோப்பைகளை அசால்டாக வென்று கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் ஆஸ்திரேலியா 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த கதைக்கு கடந்த வருடம் துபாயில் முற்றுப்புள்ளி வைத்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஆரோன் பின்ச் தலைமையில் டேவிட் வார்னர் போன்ற வீரர்களின் தரமான செயல்பாடுகளால் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த அந்த அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில் இந்த வருடம் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்க வைக்க களமிறங்குகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி:
பொதுவாகவே தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட ஆஸ்திரேலியா இம்முறை தங்களது நாட்டில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை தக்க வைப்பதற்காக உலகின் இதர அணிகளுக்கு முன்னோடியாக முதல் ஆளாக தங்களது உலக கோப்பை அணியை அறிவித்துள்ளது. அதில் ஸ்பெஷல் அம்சமாக சிங்கப்பூருகாக விளையாடி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாட முயற்சித்து வரும் இளம் ஆல்-ரவுண்டர் டிம் டேவிட் இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக விளையாடாத நிலையில் நேரடியாக இந்த உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலங்களாகவே பிக்பேஷ் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக கடைசி நேரத்தில் பதிவு செய்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றியதால் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். இருப்பினும் மற்றொரு வீரர் மைக்கேல் ஸ்வெப்சன் கழற்றிவிட பட்டுள்ளார். ஆரோன் பின்ச் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் கடந்த முறை வெற்றிக்கு பங்காற்றிய கிளன் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், வேட், ஸ்டீவ் ஸ்மித் என பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இதே அணி விளையாடும் நிலையில் டேவிட் வார்னருக்கு மட்டும் அதில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணி இதோ:

ஆரோன் பின்ச் (கேப்டன்), பட் கமின்ஸ் (துணை கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அஸ்டன் அகர், டிம் டேவிட், ஜோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்லிஷ், மிட்செல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், கேன் ரிசர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர்*, ஆடம் ஜாம்பா.

- Advertisement -

இங்கிலாந்து அணி:
அதேபோல் பரம எதிரியான ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து தனது அணியை அறிவித்துள்ளது. சமீபத்தில் இயன் மோர்கன் ஓய்வு பெற்ற நிலையில் கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் சமீபத்திய இந்தியா போன்ற தொடர்களில் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக சுமாராக செயல்பட்டு மோசமான பார்மில் இருக்கும் நட்சத்திரம் ஜேசன் ராய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் 2019 உலக கோப்பைக்கு பின் பெரும்பாலும் காயத்தால் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் குணமடையாததால் இந்த அணியிலும் இடம் பிடிக்கவில்லை.

அவருக்கு பதில் கிறிஸ் ஓக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அத்துடன் 2019இல் தடைபெற்று பின்னர் நீக்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸை இங்கிலாந்து இந்த தொடரிலும் சேர்க்கவில்லை. இருப்பினும் டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன் போன்ற நட்சத்திரங்கள் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் இந்த அணியில் இடம் பிடித்திருந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜானி பேர்ஸ்டோ கடைசி நேரத்தில் காயத்தால் விலகுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணி இதோ:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொய்ன் அலி, ஹரி ப்ரூக், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், லியம் லிவிங்ஸ்டன் டேவிட் மாலன், அடில் ரஷிட், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் ஓக்ஸ், மார்க் வுட்
ரிசர்வ் வீரர்கள்: டைமல் மில்ஸ், லியாம் டாசன், ரிச்சர்ட் கிலீசன்

Advertisement