திணறி கொண்டிருந்த பின்ச் அடித்த சதம். பாக் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸி வெற்றி

Finch
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு எதிரேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி.

Aus-1

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக சோஹைல் சதமடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி சார்பாக குல்டர்நைல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இறங்கியது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்களை அடித்து வெற்றிபெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஆரோன் பின்ச் சதமடித்து ஆட்டமிழக்காமல் 116 ரன்களை அடித்தார். அடுத்தபடியாக மார்ஷ் 91 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

aus

கடைசியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது பின்ச் தொடர்ந்து திணறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக திணறி வந்த பின்ச் தற்போது சதமடித்து இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது என்று கூறலாம்.

Advertisement