- Advertisement -
உலக கிரிக்கெட்

160இல் 103 ரன்ஸ்.. தனியாளாக நியூஸிலாந்தை நொறுக்கிய மார்ஷ்.. 2005 பாண்டிங்கை முந்தி அபார சாதனை

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி அக்டோபர் நான்காம் தேதி நியூசிலாந்தில் இருக்கும் மவுண்ட் மௌன்கனி நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 156/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிம் சைபர் 48 (35), கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 26 (22), ஜேம்ஸ் நீசம் 25 (18) ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக சீன் அபௌட் 3, சேவியர் பார்லெட் 2, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

தனியாளாக நொறுக்கிய மார்ஷ்:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கினார். ஆனால் எதிர்ப்புறம் டிராவிஸ் ஹெட் 8, மேத்தியூ ஷார்ட் 7, டிம் டேவிட் 3, அலெல்ஸ் கேரி 1, மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அதனால் 93/5 என ஆஸ்திரேலியா ஒரு பக்கம் தடுமாறியது.

ஆனால் மறுபக்கம் தடுமாற்றமே தெரியாத அளவுக்கு நியூசிலாந்து பவுலர்களை சொல்லி அடித்த மார்ஷ் 21 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். எதிர்ப்புறம் மிட்சேல் ஓவன் 14, சேவியர் பார்லெட் 1 ரன்னில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் அடுத்து வந்த சீன் அபௌட் 13* (8) ரன்கள் குவித்தார். இந்தப் பக்கம் நியூசிலாந்தை நொறுக்கிய மார்ஷ் 8 பௌண்டரி 7 சிக்ஸருடன் சதத்தை விளாசி 103* (52) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:

அதனால் 18 ஓவரிலேயே 160/7 ரன்கள் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மறுபுறம் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 2, ஜேம்ஸ் நீசம் 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இதனால் 2 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆஸ்திரேலியா வென்றது.

இதையும் படிங்க: இதுதான் ரோஹித் சர்மாவுக்கு விராட் கோலிக்கும் கடைசி தொடர்.. 2027 உலகக்கோப்பையில் வாய்ப்பிருக்கா?

இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா அடித்த 160 ரன்களில் கிட்டத்தட்ட தனியாளாக 103* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2005 ஆக்லாந்து டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவுக்காக 98* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -