மகளிர் உலககோப்பை 2022 : இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி சாம்பியன், எத்தனாவது கோப்பைனு தெரியுமா?

Women's World Cup 2022 Champion Aus 2
- Advertisement -

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக துவங்கியது. கடந்த 1973 முதல் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பையில் இதுவரை 11 தொடர்கள் நடைபெற்ற நிலையில் 12-வது முறையாக தொடங்கிய இந்த வருட மகளிர் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்றன. கடந்த ஒரு மாதமாக நியூசிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த இந்த உலக கோப்பையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் லீக் சுற்று போட்டிகள் நடந்தன.

ICC Women's World Cup 2022

- Advertisement -

அதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்ற 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. மறுபுறம் லீக் சுற்றில் அசத்திய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

பைனலில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து:
அதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 157 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதேபோல் 2-வது அரையிறுதிப் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 2-வது அணியாக பைனலுக்குள் நுழைந்தது. இதை அடுத்து மெக் லென்னிங் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று நடந்தது.

Aus vs ENG Women's World Cup

இந்த போட்டியை காண உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்றே கூறலாம். ஏனெனில் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் தான் இதுவரை அதிக கோப்பைகளை வென்று உலகின் வெற்றிகரமான டாப் 2 அணிகளாக விளங்குகின்றன. அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் துவங்கிய இந்த மாபெரும் பைனலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா:
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி மற்றும் ரிச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் இணைந்து முதல் ஓவரில் இருந்தே இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சரமாரியாக அடித்து ரன்களை குவிக்க தொடங்கினார். இவர்களை அவுட் செய்ய முடியாமல் விழிபிதுங்கி நின்ற இங்கிலாந்தை புரட்டி எடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தது. இந்த ஜோடியில் 93 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 68 ரன்கள் குவித்த ரிச்சல் ஹெய்ன்ஸ் ஆட்டமிழக்க அடுத்து வந்த பெத் மூனி உடன் ஜோடி சேர்ந்த அலிசா ஹீலி மீண்டும் 2-வது விக்கெட்டுக்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை கதிகலங்க வைத்தார்.

இந்த ஜோடியில் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய பெத் மூனி வெறும் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 62 ரன்களை குவித்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து ஆரம்பம் முதல் நங்கூரமாக களத்தில் நின்று இங்கிலாந்தை பந்தாடி விஸ்வரூபம் எடுத்த அலிசா ஹீலி சதம் அடித்தார். அதோடு ஓயாது அவர் தொடர்ந்து பட்டையை கிளப்பி 138 பந்துகளில் 26 பவுண்டரிகள் உட்பட 170 ரன்கள் விளாசி 45 ஓவரில் தான் அவுட்டானர்.

- Advertisement -

போராடி இங்கிலாந்து தோல்வி:
இப்படி முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா 356 என்ற மிகப்பெரிய ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சௌரப்சொல் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதை தொடர்ந்து 357 என்ற இமாலய இலக்கை அதுவும் உலகக் கோப்பை பைனல் போன்ற மாபெரும் போட்டியில் துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியது.

Sciver Eng Womens AUS vs ENG

அந்த அணிக்கு தொடக்க வீராங்கனை டேனியல் வைட் 4 ரன்களிலும் பியூமௌன்ட் 27 ரன்களிலும் அவுட்டானார்கள். அந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் 26 (25) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நட்சத்திர வீராங்கனை நட் ஸ்கிவர் மட்டும் அதிரடியாக விளையாடி தனது அணியின் வெற்றிக்காக போராடினார். ஒருபுறம் அவர் நிலைத்து நிற்க மறுபுறம் வந்த ஜோன்ஸ் 20 (18) டன்க்ளி 22 (22) என முக்கிய மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்கள். இதனால் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து வெறும் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு தனி ஒருத்தியாக 121 பந்துகளில் சதமடித்து 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 148* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றிக்காக போராடிய நட் ஸ்கிவர் போராட்டம் வீணானதால் இங்கிலாந்து ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்தன.

- Advertisement -

தலையை சுற்ற வைக்கும் ஆஸ்திரேலியா:
இதன் வாயிலாக 71 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா வலுவான நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. இந்த அபார வெற்றிக்கு 170 ரன்கள் விளாசி வித்திட்ட அலிஷா ஹீலி ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்று சாதனை படைத்தார். இதில் வியப்பு என்னவெனில் இந்த உலக கோப்பையில் அந்த அணி லீக் சுற்றில் பங்கேற்ற 7 போட்டிகளில் ஒரு தோல்வி கூட அடையாமல் வெற்றி நடை போட்டு அரையிறுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது கோப்பையை முத்தமிட்டுள்ளது.

அதைவிட ஆச்சரியம் என்னவெனில் இது உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெல்லும் 7-வது உலக கோப்பையாகும். ஆம் கடந்த 1973 வரை இந்த வருடத்தையும் சேர்த்து மொத்தம் 12 உலக கோப்பைகள் நடைபெற்றுள்ளது. அதில் 1978, 1982, 1988, 1997, 2005, 2013 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து இப்போது 2022*இல் 7-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட்டில் தன்னை ஒரு வெற்றிகரமான அணியாக மீண்டும் இந்த உலகிற்கு  பிரகடனப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை தவிர வேறு எந்த ஒரு அணியும் 5 மகளிர் உலகக் கோப்பைகளை வென்றது கிடையாது என்பது பிரம்மிக்க வைக்கும் விஷயமாகும். ஏனெனில் அந்த அணியை தவிர்த்து இங்கிலாந்து 4 கோப்பைகளையும் நியூசிலாந்து 1 கோப்பையையும் வென்றுள்ளது.

இது மட்டுமில்லாமல் 2010, 2012, 2014, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த மகளிர் டி20 உலகக் உலகக் கோப்பைகளையும் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிரணி டி20 உலகக்கோப்பை வரலாற்றிலும் வெற்றிகரமான அணியாக உலக சாதனை படைத்துள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 19 மகளிர் உலகக் கோப்பைகள் நடைபெற்றுள்ளன.

இதையும் படிங்க : தொடர் தோல்வியால் தடுமாறும் மும்பையை அவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

அதில் ஆஸ்திரேலியா மட்டும் 12 உலக கோப்பைகளை வென்றுள்ளது என்பது இந்திய ரசிகர்களின் தலையை சுற்ற வைக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் இந்திய மகளிர் அணி இதுவரை 50 ஓவர் அல்லது 20 ஓவர் உட்பட எந்த ஒரு ஐசிசி உலகக் கோப்பையையும் ஒருமுறை கூட வென்றதே கிடையாது.

Advertisement