இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது பயமாகவும், வெறுப்பாகவும் உள்ளது – ஆஸி வீரர் கலக்கம்

Ind
- Advertisement -

மகளிர்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. வரும் 8ஆம்தேதி மெல்போர்ன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க உள்ளது.

Womens

- Advertisement -

ஏற்கனவே லீக் சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஷபாஃலி வர்மாவின் அபாரமான பேட்டிங் மற்றும் ஸ்மிரித்தி மந்தனாவின் அற்புதமான சுழற்பந்து வீச்சின் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அதே நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியில் வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் பேசியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது :

இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதை வெறுக்கிறேன். இந்திய வீராங்கனைகள் எனது பந்துவீச்சை அடித்து நொறுக்குகின்றனர். ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடுகின்றனர் . அதிலும் குறிப்பிப்பாக பெண்கள் அணியின் சேவாக் அழைக்கப்படும் ஷபாலி வர்மா இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் பேட்டிங்கில் ஆவேசமாக அதிரடியாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதற்கு முன்னர் முத்தரப்பு தொடரில் ஆடிய போது இருவரும் எனது பந்துவீச்சை சிக்சர்களாக விளாசினார். அந்த சிக்சர்கள்தான் எனது பந்துவீச்சில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய ஷார்ட் என்று பயத்துடன் கூறியுள்ளார் மேகான் ஷட்.

இந்திய அணிக்கெதிராக இறுதிப்போட்டியில் ஆடுவதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என ஆஸ்திரேலிய வீராங்கனை மோகன் ஷட் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டியை தற்போது இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னர் தற்போது இந்திய மகளிரணிக்கு வாழ்த்துக்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement