இரண்டாவது டெஸ்ட் போட்டி : ஆஸி அணி செய்த தவறுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி – விவரம் இதோ

Rahane
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட் ஆகியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கிரிஸ் கிரீன், டிம் பெய்ன் ஆகியோர் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து 195 ரன்களை குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை பெற்று 131 ரன்கள் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை பெற்று 10 விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 70 எடுத்தால் வெற்றி இழக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த இலக்கினை இந்திய அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதற்கு அதிகநேரம் எடுத்துக் கொண்டனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தவறிவிட்டனர். இதன் காரணமாக ஐசிசி தற்போது ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அனைவர்க்கும் 40 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காண புள்ளிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணிக்கு 4 புள்ளிகளை குறைத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் தொடரின் போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டது என்று இருமுறை தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement