என்னது நாங்க அங்க போகனுமா? போனா உயிரோட திரும்புவோமா? – பயத்தில் ஆஸி வீரர்கள்

Starc
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் முதல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒரு கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா அதன்பின் தற்போதுதான் 24 ஆண்டுகள் கழித்து அந்நாட்டிற்கு மீண்டும் செல்ல உள்ளதால் இந்த சுற்றுப்பயணம் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக முழு பலத்துடன் கூடிய ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

aus vs pak

- Advertisement -

கலக்கத்தில் வீரர்கள்:
இந்த சரித்திர கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானுக்குச் செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தயங்குவதாக ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற “தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்” நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கு முன் பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதன் காரணமாக அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதை பல உலக அணிகள் நிறுத்திவிட்டன. இருப்பினும் விடாத முயற்சி செய்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டில் இலங்கை, ஜிம்பாப்வே போன்ற அணிகளுடன் விளையாடி வெற்றி கண்டது.

aus

டாட்டா காட்டிய நியூஸிலாந்து :
அந்த வேளையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் மோசமான பாதுகாப்பு காரணங்களால் கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. அதே பயத்தால் அதற்கு அடுத்த மாதம் இங்கிலாந்து பங்குபெற இருந்த கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது.

- Advertisement -

அதன் காரணமாகவே தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பயப்படுகிறார்கள் என தெரிகிறது. ஆனாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு 2 முறை சோதித்துள்ளதால் இந்த கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aus 1

பயத்தில் ஆஸி வீரர்கள்:
ஆனாலும் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில் உள்ள ஒரு முக்கிய நகரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இப்படி பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற பாதுகாப்பு காரணங்களால் அந்நாட்டுக்கு செல்ல அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் திருப்தியாக இல்லாமல் தயங்குவதாக தெரிகிறது.

- Advertisement -

போதாக்குறைக்கு பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடத்துவதால் ஆஸ்திரேலிய வீரர்களின் தயக்கம் மற்றும் கலக்கம் மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : 10 பேருடன் தடுமாறி நின்ற டீம், 11வது வீரராக களமிறங்கி காப்பாற்றிய கோச் – பிக்பேஷில் நிகழ்ந்த சுவாரசியம்

வரும் மார்ச் 3ஆம் தேதி துவங்க உள்ள இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்பின் மார்ச் 29ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், ஏப்ரல் 5ஆம் ஒரு டி20 போட்டியும் நடைபெற உள்ளது. இருப்பினும் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement