10 பேருடன் தடுமாறி நின்ற டீம், 11வது வீரராக களமிறங்கி காப்பாற்றிய கோச் – பிக்பேஷில் நிகழ்ந்த சுவாரசியம்

Sixer-3
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ளது. இதை அடுத்து கடந்த சில தினங்களாக பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த பிளே ஆப் சுற்றின் முடிவில் பெர்த் மற்றும் சிட்னி ஆகிய 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

sixer 1

- Advertisement -

10 பேருடன் நின்ற டீம்:
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முக்கியமான பிளே ஆப் போட்டியில் அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆனால் சிட்னி நகரில் நடந்த இப்போட்டிக்கு முன்பாக சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வந்த “விக்கெட் கீப்பர் ஜோஸ் பிலிப்” கரோனோ காரணமாக திடீரென்று விலகும் நிலை நேரிட்டது.

இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் விக்கெட் கீப்பர் இல்லாமல் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெறும் 10 வீரர்களுடன் வழி தெரியாமல் நின்றது. ஏனெனில் அந்த அணியில் இடம் பிடித்திருந்த எஞ்சிய வீரர்கள் ஏற்கனவே அந்த பாதிப்புக்குள்ளாகி தனிமைப்படுத்த பட்டிருந்தார்கள்.

sixers

களமிறங்கிய கோச்:
அப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் வேறு வழியே இல்லாமல் சிட்னி அணி தடுமாறி நின்ற போது அந்த அணியின் துணை பயிற்சியாளராக இருக்கும் ஜெ லேன்டனை களமிறங்கி விளையாட அந்த அணி நிர்வாகம் அழைத்தது. அந்த மோசமான தருணத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாத அவரும் “நான் களமிறங்க தயார்” என கூறியதுடன் மைதானத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களின் வாயிலாக உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.

- Advertisement -

வீண் போகால:
இந்த வித்தியாசமான அரிதான நிகழ்வு பற்றி துணை பயிற்சியாளராக இருந்ததுடன் களத்திலும் இறங்கி விளையாடிய ஜெ லெண்டன் பேசுகையில், “துணை பயிற்சியாளராக இருந்து அணியில் விளையாடுவது மிகச்சிறப்பாக இருந்தது. இது பற்றி எனக்கு 1 மணிக்கு தான் தெரிந்தது. ஆனாலும் எல்லாம் சரியான வழியில் சென்றது. கடைசியாக கடந்த வருடம் கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பு தான் நான் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தேன் என பெருமையுடன் கூறினார்.

sixer 2

அவரின் இந்த அர்ப்பணிப்பு வீண்போகவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலைட் 20 ஓவர்களில் 167/4 ரன்கள் எடுத்தது. பின் அதை துரத்திய சிட்னி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக சிட்னி சேசிங் செய்கையில் கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜெ லேன்டன் ரன் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் தனது அணியின் வெற்றியில் பங்காற்றினார்.

Advertisement