431 ரன்ஸ்.. தெ.ஆ அணியை வெறியுடன் அடித்த ஹெட், மார்ஷ், க்ரீன்.. ஆஸி வரலாறு காணாத சாதனை

AUS vs RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்காய் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் – கேப்டன் மிட்சேல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். கடந்தப் போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் தென்னாப்பிரிக்காவுக்கு கருணை காட்டாமல் வெறித்தனமாக விளையாடிய அந்த ஜோடியில் ஹெட் வெளுத்து வாங்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

3 பேட்ஸ்மேன்கள் சதம்:

அவருடன் சேர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய மார்ஷ் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அந்த ஜோடி தென்னாப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. அவர்களைப் பிரிக்க முடியாமல் திணறிய தென்னாப்பிரிக்க பவுலர்களை அடித்து நொறுக்கிய அந்த ஜோடி இரட்டை சதம் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அதில் 80 பந்துகளில் சதத்தை அடித்த ஹெட் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 17 பவுண்டரி 5 சிக்ஸருடன் 142 (103) ரன்களை விளாசி மகாராஜ் சுழலில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து 250 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 100 (106) ரன்கள் குவித்து முத்துசாமி சுழலில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

வரலாறு காணாத சாதனை:

அடுத்ததாக ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அவர்களை விட அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்காவை புரட்டி எடுத்தார்கள். குறிப்பாக 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய கிரீன் 28 பந்துகளில் 50 ரன்கள் அடித்து மிரட்டினார். தொடர்ந்து அசத்திய அவர் 47 பந்துகளில் 100 ரன்கள் அடித்து க்ளன் மேக்ஸ்வெலுக்கு (40 பந்துகள்) பின் 2வது வேகமான சதத்தை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

கடைசி வரை அவுட்டாகாத அவர் 6 பவுண்டரி 8 சிக்ஸருடன் 118* (55) ரன்கள் விளாசினார். அவருடன் அசத்திய அலெக்ஸ் கேரி சதத்தை அடித்து 50* (37) ரன்கள் குவித்ததால் 50 ஓவரில் ஆஸ்திரேலியா 431/2 ரன்கள் அடித்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

இதையும் படிங்க: கோலி மாதிரி பும்ராவும் நிறைய தியாகம் பண்ணியிருக்காரு.. அதனால் தான் அவர் இன்னைக்கு நம்பர் 1 – பரத் அருண் பேட்டி

இதற்கு முன் 2015ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417/6 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் ஒரு ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 3 சதங்களை (ஹெட், மார்ஷ், க்ரீன்) அடித்து ஆஸ்திரேலியா வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது.

Advertisement