ஆஸியை 183/3 டூ 236க்கு அவுட்டாக்கிய இந்தியா.. டிராவிஸ் ஹெட்டை காலி செய்வதில் சிராஜ்.. பும்ராவின் சாதனை சமன்

Ind vs aus Sydney
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்த இந்தியா புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இறுதியாக அக்டோபர் 25ஆம் தேதி அத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.

இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த டிராவிஸ் ஹெட் 29 (25) முகமது சிராஜ் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

ஹெட்டை காலி செய்த சிராஜ்:

இதையும் சேர்த்து இந்தியாவை பார்த்தாலே அடித்து நொறுக்கக்கூடிய டிராவிஸ் ஹெட்டை சர்வதேச கிரிக்கெட்டில் சிராஜ் 8வது முறையாக அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக ட்ராவிஸ் ஹெட்டை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற ஜஸ்ப்ரித் பும்ரா சாதனையை சிராஜ் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஜஸ்ப்ரித் பும்ரா/முகமது சிராஜ்: தலா 8
2 ஸ்டூவர்ட் ப்ராட்: 7
3. ககிஸோ ரபாடா: 6

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் 41 ரன்களில் அக்சர் பட்டேல் சுழலில் போல்டானர். அடுத்ததாக வந்த மாட் ரென்ஷா’வை அரை சதமடித்த போது 56 ரன்னில் காலி செய்த வாஷிங்டன் சுந்தர் மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த மேத்தியூ ஷார்ட்யையும் 30 ரன்னில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

லோயர் ஆர்டரில் அலெக்ஸ் கேரி 24, மிட்சேல் ஓவன் 1 ரன்களில் ஹர்ஷித் ராணா வேகத்தில் விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவைக் கொடுத்தனர். அடுத்து வந்த மிட்சேல் ஸ்டார்க் 2, நாதன் எலிஸ் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இறுதியில் கூப்பர் கோன்லியை 23 ரன்களில் அவுட்டாக்கிய இந்தியா 46.4 ஓவரில் ஆஸ்திரேலியாவை 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

இதையும் படிங்க: 3 ஆவது ஒருநாள் போட்டியில் நிதீஷ் ரெட்டி இடம்பெறாததற்கு என்ன காரணம்? – பி.சி.சி.ஐ விளக்கம்

குறிப்பாக ஹெட், மார்ஷ், ரென்ஷா ஆகியோரின் நல்ல ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 183/3 என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை இந்தியா 236க்கு சுருட்டியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் எடுத்து தம்மை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் 2, சிராஜ், ப்ரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 237 என்ற வெற்றி இலக்கை இந்தியா துரத்துகிறது.

Advertisement