
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி நாளை பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன.
இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி எது? என்பது குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதோடு இரு அணி வீரர்களும் ஏற்கனவே சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் நாளை இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5:00 மணி அளவில் துவங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு ஒருநாள் முன்னதாகவே ஆஸ்திரேலிய அணி தங்களது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இந்திய அணிக்கு எதிரான மூன்றாவதுடெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அவர்கள் ஒருநாள் முன்கூட்டியே அறிவித்து அதிரடி காட்டியுள்ளனர்.
இந்த அறிவிப்பில் அந்த அணியில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த போட்டியின் போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய ஜாஷ் ஹேசல்வுட் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஸ்காட் போலந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஒரே ஒரு மாற்றமாக ஹேசல்வுட் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கவர் ட்ரைவ் வேணாம்னு சொல்லல.. சச்சின் மாதிரி கோலி இதை செஞ்சா இரட்டை சதமடிக்கலாம்.. கவாஸ்கர் அட்வைஸ்
1) உஸ்மான் கவாஜா, 2) நாதன் மெக்ஸ்வீனி, 3) மார்னஸ் லாபுஷேன், 4) ஸ்டீவ் ஸ்மித், 5) டிராவிஸ் ஹெட், 6) மிட்செல் மார்ஷ், 7) அலெக்ஸ் கேரி, 8) பேட் கம்மின்ஸ், 9) மிட்செல் ஸ்டார்க், 10) நாதன் லயன், 11) ஜாஷ் ஹேசல்வுட்.