ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியாது என்பதால் டூர் அடிக்க உள்ள ஆஸி வீரர்கள் – எங்கு தெரியுமா ?

Aus-ipl

ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கு கொரோனா தொற்று வந்ததை அடுத்து ஐபிஎல் தொடர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக நேற்று சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது. மேலும் ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்பொழுது உறுதியாக எப்பொழுது நடைபெறும் என்று கூறிவிட முடியாது என்றும் ஆனால் நிச்சயம் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் துவங்கும் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Rajiv-Shukla

மேலும் அனைத்து வீரர்களையும் அவர்களது ஊர்களுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளது. எனவே அனைத்து வீரர்களும் அவர்களது ஊர்களுக்குச் செல்ல தயாராகிக் கொண்டு வருகின்றன. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களது ஊர்களுக்கு செல்லாமல் நேரடியாக மாலத்தீவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வரும் வேளையில், மே 15ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களும் ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளது. மேலும் இது சம்பந்தமாக பேசியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஆஸ்திரேலிய மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

maxwell

எனவே அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் தற்போதைக்கு மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கே சிறிது காலம் கழித்து அனைவரும் தனிமையில் இருக்க போவதாகவும், பின்னர் முறையான பரிசோதனைக்கு பின்னர் நல்ல உடல் தகுதியுடன் மீண்டும் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

- Advertisement -

Stoinis-2

மே 15ஆம் தேதி வரை தற்பொழுது இந்தியாவில் இருந்து எந்த விமானங்களும் ஆஸ்திரேலியா செல்ல முடியாது, மேலும் சூழலை பொறுத்து மீண்டும் தடைக்காலம் நீட்டிக்கப்படலாம். எனவே அனைவரும் மாலத்தீவு சென்று அங்கே தங்கி அதன் பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.