கண்டிஷன்லாம் பாலோ பண்ணலனா இந்திய அணி இங்கு விளையாடவே வேணாம் – எச்சரித்த ஆஸி அமைச்சர்

Aus
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட “பார்டர் கவாஸ்கர்” டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. அண்மையில் சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

Rohith

- Advertisement -

இதனால் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கிறது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தற்போது நியூசவுத் வேல்சில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிட்னி வந்தடைந்தனர். கொரோனா பரவி வருதாக சிட்னி மற்றும் பிரிஸ்பேன் வரும் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய வீரர்கள் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சிட்னியில் நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, புத்தாண்டு கொண்டாடிய ரோகித், சுப்மன் கில், பிரித்திவி ஷா, ரிஷப் பந்த் மற்றும் சைனி ஆகிய 5 வீரர்கள் கொரோனா கட்டுபாட்டை மீறியதாகவும், பயோ பபுள் வளையத்தில் இருந்து வெளியேறி பொது இடத்தில் உணவு உட்கொண்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது.

siraj

மேலும் விராட் கோலி மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகிய இவரும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது முகக்கவசம் அணியாமல் இருந்ததாகவும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாகாண சுகாதார அமைச்சர் ராஸ் பேட்ஸ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டிம் மந்தர் கூறுகையில் : இந்தியர்கள் விதிகளைப் பின்பற்ற விரும்பவில்லை என்றால், அவர்கள் பிரிஸ்பேனுக்கு வரவேற்கப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.

Ashwin-3

இங்குள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய வீரர்கள் விளையாடுவதாக இருந்தால் இங்கு வரட்டும். இல்லையென்றால் அவர்கள் இங்கு வந்து விளையாட வேண்டிய அவசியம் இல்லை என்று நேரடியாக அவர் தனது எதிர்ப்பை இந்திய அணியின் மீது காட்டியுள்ளார்.

Advertisement