மீண்டும் சிராஜை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்தமுறை என்ன சொல்லி இருக்காங்க பாருங்க – வைரலாகும் வீடியோ

Siraj

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமாகி இருந்தாலும் அவரது பந்துவீச்சு அனைவரும் கவரும் விதத்தில் இருக்கின்றது. தான் பங்கேற்ற போட்டிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பவீழ்த்தி வருகிறார் சிராஜ்.

Siraj 1

ஒருபக்கம் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் சிராஜ் மறுபக்கம் ஆஸ்திரேலிய ரசிகர்களின் சர்ச்சையான இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். கடைசியாக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்கள் அவரை குரங்கு, நாய் என இன ரீதியாக கேலி செய்தனர். அப்போது அது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகளவு வைரல் ஆனது.

மேலும் அப்போதே அவர் களத்தில் இருந்த அம்பயர்களிடம் ரசிகர்களின் மோசமான செயல்பாடு குறித்து புகார் அளித்திருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டும் இனிமேல் இந்த விடயம் மீண்டும் தொடராது என்று கூறியது. மேலும் இந்த விடயம் குறித்து ஆஸ்திரேலிய நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது போட்டியிலும் சிராஜ் ரசிகர்களின் சீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

அதன்படி இன்று துவங்கிய 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சிராஜ்யை நோக்கி ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் முதுகெலும்பில்லாத புழு என்று அவரை கூறி வம்புக்கு இழுத்தனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலிய நிர்வாகமும் ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி இனி இதுபோன்ற இனவெறி சீண்டலும், வார்த்தை கேலியும் நடைபெற்றால் நாங்கள் விடமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த தொடர் மோசமான செயல் இந்திய ரசிகர்களிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.