இந்திய – ஆஸ்திரேலிய தொடரின் சுவாரசியத்தை அதிகரிக்க ஆஸி கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு – ரசிகர்கள் வரவேற்பு

INDvsAUS

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடப்போகிறது. இதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடாத வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் துபாய் சென்று இருக்கின்றனர். துபாயில் சில நாட்களுக்குப் பின்னர் அனைவரும் நேரடியாக அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். அங்கு வருகிற நவம்பர் 27ம் தேதி துவங்கி ஜனவரி 19ம் தேதி முடிவடைகிறது.

INDvsAUS

உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்த தொடர்கள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரில் மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதித்து போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரே ஒரு ரசிகர் கூட இல்லாமல் தான் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்த தொடர் நடைபெறும் ஆஸ்திரேலிய நாட்டின் உள்ளூர் அரசு மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

fans

அதேநேரத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்கு 25 சதவீத ரசிகர்களையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீத ரசிகர்களையும், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு 75 சதவீத ரசிகர்களையும் அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இப்படிப் பார்த்தால் குறைந்தது ஒவ்வொரு போட்டிக்கும் 25 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

fans 2

கிட்டத்தட்ட 8 மாதத்திற்க்கு பிறகு நடைபெற இருக்கும் இந்த தொடரில் தான் முதல்முறையாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.