ஸ்டீவன் ஸ்மித் & டேவிட் வார்னர்க்கு வாழ்நாள் தடை விதிக்க ஆஸி கிரிக்கெட் வாரியம் பரிசீலனை !

warner
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக திட்டமிட்டு சேதப்படுத்திய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உண்டான நிலையில் அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் இருவரும் பதவி விலகினர்.

smith3

- Advertisement -

மேலும் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது.இந்நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை பற்றி யோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுபோல நடைபெறுவது முதல்முறை அல்ல, ஏற்கனவே இந்தியாவுடன் கடந்தாண்டு நடந்த டெஸ்ட் தொடரிலும் இதே போன்று இந்திய வீரர்களை கோபப்படுத்தி அவர்களை நிதானமிழக்க செய்து வெற்றிபெற முயன்றது குறிப்பிடத்தக்கது.

david

அப்போது இந்தியஅணியின் கேப்டன் விராட்கோலி பதிலுக்கு கோபப்பட்ட போது விராட்கோலியின் செயலை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதின.இந்நிலையில் தற்போது கையும் களவுமாக வசமாக சிக்கியுள்ள ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் மீது தற்போது வாழ்நாள் தடை விதிப்பது பற்றி யோசிக்கப்பட்டு வருவதால் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Advertisement