தோல்வியடைந்த பிறகு பரிசளிப்பு விழாவிற்கு கூட வராத ஆஸி கேப்டன் மேத்யூ வேட் – என்ன ஆனது? (கோச் கொடுத்த விளக்கம்)

AUS-Coach
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று திருவனந்தபுரம் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பரிசளிப்பு விழாவின் போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக அந்த அணியின் பயிற்சியாளர் வந்து தோல்விக்கான காரணத்தை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியின் முதல் ஆறு-ஏழு ஓவர்களிலேயே நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்.

- Advertisement -

எங்களால் இந்த மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் போனது. அதோடு எங்களது செயல்பாடும் தவறாக இருந்ததால் இந்திய அணி எங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கூறினார். பின்னர் இப்படி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பரிசளிப்பு விழாவிற்கு வராததற்கு என்ன காரணம் என்பது குறித்து வெளியான தகவலில் : இந்த போட்டியில் 23 பந்துகளை சந்தித்த மேத்யூ வேட் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 42 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமுழுக்காமல் இருந்தார்.

இதையும் படிங்க : முழுக்க முழுக்க அது என்னோட தப்பு தான். அதுக்காக நான் ருதுராஜ் பாயிடம் சாரி கேட்டுட்டேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

இருப்பினும் இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் வீசிய பல பந்துகளில் அவர் (மேத்யூ வேட்) உடம்பில் பல இடங்களில் அடி வாங்கினார். அதில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் நாளை மறுதினம் மூன்றாவது போட்டி நடைபெற இருப்பதால் விரைவாக முதலுதவி பெறவே ஓய்வறைக்கு சென்றதால் அவரால் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்ற தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement