முழுக்க முழுக்க அது என்னோட தப்பு தான். அதுக்காக நான் ருதுராஜ் பாயிடம் சாரி கேட்டுட்டேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

Jaiswal-and-Ruturaj
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றி பதிவு செய்து இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளனர். அதன்படி நவம்பர் 26-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களையும், கெய்க்வாட் 58 ரன்களையும், இஷான் கிஷன் 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கி 25 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஆட்டம் உண்மையிலேயே எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. நான் என்னுடைய அனைத்து வகையான ஷாட்டுகளையும் இந்த போட்டியில் வெளிப்படுத்த விரும்பினேன். அந்த வகையில் பயமற்று நான் இந்த போட்டியில் விளையாடியதில் மகிழ்ச்சி. அதேபோன்று இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சூர்யா பாயிடமும், வி.வி.எஸ் லக்ஷ்மணன் இடமும் நான் சுதந்திரமாக விளையாடப் போகிறேன் என்று தெரிவித்தேன்.

இதையும் படிங்க : நான் மேட்ச்க்கு முன்னாடி ஒரு விஷயம் மட்டும் நம்ம பசங்க கிட்ட சொன்னேன் – வெற்றிக்கு பின்னர் சூரியகுமார் யாதவ் பேட்டி

அந்த வகையில் அவர்களும் எனது ஆட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள். கடந்த போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததற்கு நான் தான் காரணம். அது முழுக்க முழுக்க என்னுடைய தப்புதான். நான் தவறான அழைப்பு கொடுத்ததனாலே அவர் ரன் அவுட் ஆகினார். அது குறித்து அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் ருதுராஜ் பாய் மிகவும் தன்மையானவர். போட்டியின் போது இதெல்லாம் நடப்பது சகஜம் தான் நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று கூறியதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement