159 ரன்ஸ்.. 2 நாள் மிரட்டிய வெ.இ அணியை அரை நாளில் முடித்த ஆஸி.. 2003க்குப்பின் தொடர்ந்து 4வது சாதனை வெற்றி

Aus vs Wi 1st Test
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 போட்டிகள் கொண்ட பிரேங்க் – வோரல் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலியாவை சிறப்பாக பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மிரட்டியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59, உஸ்மான் கவாஜா 47, கேப்டன் பட் கமின்ஸ் 28 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 4, ஜெய்டேன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்:

அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மிகவும் போராடி 190 ரன்களை அடித்து 10 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது. அதிகபட்சமாக சாய் ஹோப் 48, கேப்டன் ராஸ்டன் சேஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சாம் கோன்ஸ்டஸ் 5, கவாஜா 15, கேமரூன் க்ரீன் 15, ஜோஸ் இங்லிஷ் 12 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வெஸ்ட் இண்டீஸ் மிரட்டியது.

அதனால் 2வது நாளில் 97/4 என ஆஸ்திரேலியாவை திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் 3வது நாளில் நங்கூரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் அரை சதத்தை அடித்து 61 ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வெப்ஸ்ஸ்டார் 63 ரன்கள் எடுத்தார். அதை வீணடிக்காத வகையில் விளையாடிய அலெக்ஸ் கேரி 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

2003 முதல் 4வது தொடர் வெற்றி:

இறுதியில் ஸ்டார்க் 16, லயன் 13*, ஹேசல்வுட் 12 ரன்களை எடுத்த உதவியுடன் ஆஸ்திரேலியா 310 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 301 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை மிரட்டலாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 141 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

இதையும் படிங்க: 5 சிக்ஸ் 252.63 ஸ்ட்ரைக் ரேட்டில் இங்கிலாந்தை நொறுக்கிய சூர்யவன்சி.. இந்தியா அண்டர்-19 மிரட்டல் வெற்றி

அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 38*, சமர் ஜோசப் 44 (22) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த வகையில் 2 நாட்கள் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 2 செஷனில் அரை நாளில் தெறிக்க விட்ட ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையும் சேர்ந்து 2003 முதல் பார்படாஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய தொடர்ந்து 4வது வெற்றியைப் பெற்றது.

Advertisement