இங்கிலாந்தை அடித்து துவைத்து வீட்டுக்கு அனுப்பிய ஆஸ்திரேலியா – சச்சினின் உலக சாதனையை சமன் செய்த வார்னர் ஜோடி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடர்ந்து அங்கேயே முகமிட்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே வென்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றிய நிலையில் நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் தங்களது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்ட டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஆகிய ஓப்பனிங் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது.

நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி அவுட்டாக அடம் பிடித்த இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் போட்ட திட்டங்களை உடைத்து இங்கிலாந்து பவுலர்களை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் முதல் ஆளாக சதமடித்து அசத்தினார். அவருடன் மறுபுறம் சீராக ரன்களை குவித்த டேவிட் வார்னர் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தி தனது பங்கிற்கு சதமடித்தார். மொத்தம் 38.1 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்று 269 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஒரு வழியாக டேவிட் வார்னர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 106 (10) ரன்களில் ஆட்டமிழந்த போது பிரிந்தது.

- Advertisement -

உலக சாதனை ஜோடி:
அதே ஓவரிலேயே உயிர் நண்பனை போல் 16 பவுண்டரி 4 சிக்சருடன் டிராவிஸ் ஹெட் 152 (130) ரன்களில் ஆட்டமிழந்த போது மழை வந்து சென்றதால் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் 21, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12, மிட்சேல் மார்ஷ் 30 என அடுத்து வந்த வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவரில் ஆஸ்திரேலியா 355/5 ரன்கள் குவித்து அசத்தியது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 366 ரன்களை துரத்திய இங்கிலாந்தின் அதிரடி வீரர்கள் ஆரம்ப முதலே தரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய பவுலர்களிடம் அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஜேசன் ராய் 33, டேவிட் மாலன் 2, ஜேம்ஸ் வின்ஸ 22, சாம் பில்லிங்ஸ் 2, மொய்ன் அலி 18, கேப்டன் பட்லர் 1 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் திணறிய இங்கிலாந்து 31.4 ஓவரிலேயே 142 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மாயாஜாலத்தை புகுத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக சுழல் நாயகன் ஆட்டம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதன் வாயிலாக 221 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்த ஆஸ்திரேலியா 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வதம் செய்து வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. மேலும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் கொடுத்த தோல்விக்கு பழி தீர்த்து நாட்டுக்கு அனுப்பி வைத்தது. அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையும் ஆஸ்திரேலியா படைத்தது. இதற்கு முன் கடந்த 2018இல் இலங்கை 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். ஆனாலுக்கு கூட உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து தாயகம் திரும்பியது என்றே சொல்லலாம்.

1. முன்னதாக இப்போட்டியில் 269 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஜோடி ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் 284 ரன்களை குவித்துள்ளது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை 250+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஆகியோரது வரலாற்று உலக சாதனையை அவர்கள் சமன் செய்தனர்.

2. அத்துடன் இப்போட்டி நடைபெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் – ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை தகர்த்து அந்த ஜோடி புதிய சாதனை படைத்தது.

Advertisement