கோலிக்கு சுமையை குறைங்க. டி20 க்கு இவரை கேப்டனாக ஆக்குங்க. இந்திய அணி எங்கயோ போயிடும் – முன்னாள் வீரர் கோரிக்கை

Rohith
- Advertisement -

ரோகித்சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007ம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார். இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது சிறந்த கேப்டனாகவும் இருந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியை 2013 ஆம் ஆண்டு தலைமை ஏற்று தற்போது வரை நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வைத்துள்ளார். இதைவிட இவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதற்கு வேறு எந்த உதாரணம் தேவையில்லை.

Rohith-2

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப்பை ரோஹித்திடம் கொடுத்துவிடலாம் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது.. இந்திய அணிக்கு தற்போது இரண்டு கேப்டன்கள் தேவை. மூன்றுவிதமான போட்டிகளுக்கும் ஒரே வீரர் கேப்டனாக இருப்பது அவருக்கு அதிக சுமையை ஏற்படுத்தும்.

ஆனால் விராட் கோலி இந்த சுமையை விரும்பிச் செய்கிறார் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் ரோஹித் சர்மாவும் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை பல முறை நம்மிடம் நிரூபித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியை நான்குமுறை கோப்பைகளை பெற வைத்துள்ளார். அணியை சரியான முறையில் நடத்த அவர் தகுதியானவர்தான். டி20 கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிற்கு கொடுக்கலாம்.

Rohith-1

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி கேப்டனாக நீடிக்க வேண்டும். அதில் அவர் மிக சிறப்பாக செயல்படுகிறார். டி20 தொடர்களுக்கு மற்றும் ரோஹித் சர்மாவை வைக்காலம். இது கோலியின் வேலைப்பளுவை குறைக்கும். நாம் பல டி20 உலகக் கோப்பை தொடர்களையும் வெல்லலாம் என்று கூறியுள்ளார் அதுல் வாசன்.

ஏற்கனவே இதே கருத்தினை முன்னாள் வீரர்கள் பலரும் கூறியுள்ளார்கள். அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து இரட்டை கேப்டன் குறித்த பேச்சு அவ்வப்போது எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அதுல் வாசனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement