90ஸ் மாதிரி இல்ல.. பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா பி டீம் போதும்.. அவங்களை மிஸ் பண்ணது.. அதுல் வாசன் பேட்டி

Atul Wassan
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் துவங்குகிறது. இம்முறையும் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகத் திகழும் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

அதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவை தோற்கடிக்க சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தயாராக இருக்கிறது. இந்நிலையில் தாங்கள் விளையாடிய 90ஸ் காலகட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை விட பலமாக இருந்ததாக முன்னாள் வீரர் அதுல் வாஸன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் பாகிஸ்தானை விட இந்தியா பன்மடங்கு பலத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியா பி டீம் போதும்:

அதனால் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா பி அணியே போதும் என்று தெரிவிக்கும் அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் மிஸ் செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பாகிஸ்தான் அணியை இந்தியா பி அணி தோற்கடிக்கும். ஏனெனில் விஷயங்கள் மாறிவிட்டன. நாங்கள் 90களில் விளையாடிய போது அவர்கள் நல்ல அணியாக இருந்தனர்”

“தற்போது காலணி ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் வந்துள்ளது. நான் விராட், ரோகித்தை மிஸ் செய்ய மாட்டேன். அப்படி செய்தால் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோரையும் மிஸ் செய்ய வேண்டும். நீண்ட காலம் வாழ்ந்த அரசன் இயற்கை எய்து விட்டார். இவ்வுலகில் அனைத்தும் நகரும். புதிய சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள். அதே போல அனைவரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் திட்டுகளை வாங்கும் தேர்வாளர்களுக்காக வருந்துகிறேன்”

- Advertisement -

பலமான இந்தியா:

“விராட், ரோஹித் சகாப்தத்தை காட்டிலும் தற்போதைய இந்திய அணி பெற்ற வெற்றிகள் அற்புதமாக இருக்கிறது. ஐசிசி தரவரிசையில் டாப் 5 இடங்களுக்குள் இருக்கும் அர்ஷ்தீப் போன்றவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அணி சிறப்பாக இருப்பதால் சில வீரர்களை விளையாட வைக்க முடியாது. ஆனால் அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்”

இதையும் படிங்க: பாகிஸ்தானின் அந்த சவாலை சமாளிப்பது.. இந்தியாவுக்கு கஷ்டமா இருக்கும்.. பேட்ஸ்மேன்களை எச்சரித்த மஞ்ரேக்கர்

“தற்போதைய அணியில் இருப்பவர்கள் நல்ல அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் நம்முடைய இளம் வீரர்களின் தரமும் உயர்தரமாக இருக்கிறது. நீங்கள் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் நிறைய கற்றுக் கொள்வதால் இந்தியாவுக்காக விளையாடும் போது சிறப்பாக செயல்படுவதற்கான அனுபவத்தைப் பெறுகிறீர்கள். அதனால் பெரிய போட்டிகளில் அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது நம்முடைய வீரர்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

Advertisement