- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6 விக்கெட்ஸ்.. காபாவின் நாயகனாக.. கபில் தேவை முந்தி ஆஸியில் பும்ரா 56 வருட 2 வரலாற்று சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா 295 ரன்கள் வித்தியாசத்தில் கேப்டனாக இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அடுத்த போட்டியில் இந்தியா தோற்றாலும் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

தற்போது காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது போட்டியில் சிராஜ் உள்ளிட்ட மற்ற பவுலர்களை ஆஸ்திரேலியா அடித்து நொறுக்கி 445 ரன்கள் குவித்தது. ஆனால் அதே பிட்ச்சில் தன்னுடைய திறமையால் அபாரமாக பந்து வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா அதிகபட்சமாக 76 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் வாயிலாக புகழ்பெற்ற காபா மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

காபாவின் நாயகன்:

இதற்கு முன் 1968ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இம்மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்காக எரப்பள்ளி பிரசன்னா அவர்கள் 104 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. அந்த சாதனையை தற்போது 56 வருடங்கள் உடைத்துள்ள பும்ரா தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்துள்ளார்.

இது போக ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 50* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் ஜாம்பவான் கபில் தேவ் 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கில்லி:

தற்போது கபில் தேவ் 2வது இடம் வகிக்கும் அந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் சர்பராஸ் நவாஸ் 12 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்து 3வது இடத்தில் உள்ளார். உலகளவில் ஆஸ்திரேலியாவில் 2வது வேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் பும்ரா சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எல் கிப்ஸ், சிட்னி பேர்ன்ஸ், ரிச்சர்ட் ஹாட்லி, ஹச் லார்வுட், டி ரிச்சர்ட்சன், ஜஸ்ப்ரித் பும்ரா தலா 10 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.

இதையும் படிங்க: பும்ரா தலைமையில் மிரட்டிய இந்தியா.. இப்போ திணற அந்த 2 பெரும் ஒன்னா இல்லாததே காரணம்.. பசித் அலி

அந்த வகையில் தன்னுடைய தனித்துவ திறமையால் ஜஸ்ப்ரித் பும்ரா 30 வயதிலேயே ஜாம்பவான்களுக்கு நிகராக அசத்தி வருகிறார். அதையும் தாண்டி காபாவில் சுமாரான பேட்டிங் காரணமாக 3வது நாள் முடிவில் இந்தியா 51-4 என தடுமாறி வருகிறது. அதனால் மழை இப்போட்டியில் இந்தியாவை காப்பாற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -