விராட் கோலி எப்போவும் ஃபார்ம் அவுட்டில்லை.. 2018லயே இந்த வெற்றிக்கான திட்டம் கிடைச்சுது.. கேப்டன் பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு அபாரமாக பந்து வீசி இந்தியா சுருட்டி வீசியது. அதிகபட்சமாக மிட்சேல் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, கேஎல் ராகுல் 77, விராட் கோலி 100* ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 534 ரன்களை துரத்திய டிராவிஸ் ஹெட் 89, மிட்சேல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தும் 238 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 3, சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். குறிப்பாக சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோற்றதால் இத்தொடரில் இந்தியா தோற்கும் என்று பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கணித்துள்ளார்கள். அவர்களுக்கு முதல் போட்டியில் ரோஹித் இல்லாமலேயே பும்ரா தலைமையில் வென்ற இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் பும்ரா:

இந்த வெற்றிக்கு 8 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு இதே மைதானத்தில் விளையாடிய போது பிட்ச் எப்படி இருந்தது என்பதை வைத்து இப்போட்டிக்கான திட்டத்தை அமைத்ததாக பும்ரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் மகிழ்ச்சி. முதல் இன்னிங்ஸில் அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட நாங்கள் அதற்கு பதிலடி கொடுத்த விதம் சிறப்பாக இருந்தது”

“2018ஆம் ஆண்டு நான் இங்கே விளையாடினேன். அப்போது பிட்ச் மிருதுவாக இருந்தது நினைவிருக்கிறது. எனவே இந்த போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாரானோம். அனைவரும் தங்களுடைய திறமையை நம்புமாறு நான் எங்கள் வீரர்களிடம் சொன்னேன். இது ஜெய்ஸ்வாலுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ். நல்ல பந்துகளை தவற விட்டு அவர் நன்றாக விளையாடினார். விராட் கோலி எப்போதும் ஃபார்ம் இல்லாமல் இருந்ததில்லை”

இதையும் படிங்க: எங்களுக்கு வார்னிங் குடுத்துட்டாங்க.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு பேசிய – பேட் கம்மின்ஸ்

“கடினமான பிட்ச்களில் அவரைப் போன்ற வீரரை மதிப்பிடுவது கடினம். ஆனால் வலைப்பயிற்சியில் அவர் நன்றாக செயல்பட்டார். ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவால் நாங்கள் நன்றாக உணர்ந்தோம்” என்று கூறினார்.

Advertisement