வெஸ்ட் இண்டீஸ் பவுலரை பேட்டால் அடிக்க வந்த பாகிஸ்தான் வீரர். கரீபியன் டி20 போட்டியில் சம்பவம் – வைரலாகும் வீடியோ

Cpl

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடர் போன்று உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர் போட்டிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரும் ரசிகர்களிடம் பிரசித்தமான ஒன்று என்றால் அது மிகையல்ல. இந்த தொடர் வருடாவருடம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

cpl 1

மேலும் இந்த தொடரில் பல சுவாரசியமான விடயங்களும் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் வெஸ்ட் பவுலர் கீமோ பாலை பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஆசிப் அலி தாக்க முற்படும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

clt t20 தொடரின் நேற்றைய போட்டி ஜமைக்கா அணி மற்றும் பார்படாஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி ஜமைக்கா அணிக்காகவும், ஆசிப் அலி பார்படாஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் கீமோ பாலின் பந்துவீச்சில் ஆசிப் அலி சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு தூக்கி அடித்து கேட்ச் செய்யப்பட்டு அவுட்டாகி வெளியேறினார். எனவே பவுலர் கீமோ பால் விக்கெட் விழுந்த தருணத்தை கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் கடுப்பான ஆசிப் அலி தன்னுடைய பேட்டியில் முகத்தில் அடிப்பது போல வீசினார்.

- Advertisement -

இதனை சற்றும் எதிர்பார்க்காத கீமோ பால் அதிர்ச்சி அடைந்தார். இத்தகைய செயல் கிரிக்கெட் விதிமுறைகளை மீறியதாக இருப்பதால் விரைவில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.