கங்குலி சொன்னது அப்படியே பளிச்சாச்சி. முக்கிய தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு – விவரம் இதோ

Ganguly-2
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகளவில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டிகள் தற்போது வரை நடந்த பாடில்லை. கடைசியாக ஜனவரி மாதம் ஒரு போட்டி நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது வரை ஐபிஎல் தொடர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் போன்ற பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Corona-1

இந்த வருடம் எப்படியாவது கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஆகிய நாடுகள் இந்த வருடம் விளையாடுவதாக இருந்தன. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் இந்த வருட ஆசிய கோப்பை தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தள்ளி வைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

asia-xi-vs-world-xi

திட்டமிட்ட தேதியில் ஆசிய கோப்பை தொடரை துவங்க நினைத்து இருந்தோம். ஆனால் நாடுகளை கடந்து பயணிப்பதில் கட்டுப்பாடுகள், தனிமைப் படுத்தப்பட வேண்டிய விதிமுறைகள், சுகாதாரப் பிரச்சினைகள், சமூக இடைவெளிகள் போன்றவற்றினால் ஆசிய கோப்பை ஒத்திவைக்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமன்றி பணியாளர்கள், பங்குதாரர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதியும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் இந்த தொடர் நடக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே பி.சி.சி.ஐ யின் கங்குலி நேரலையில் இதனை உறுதி படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement