மீண்டும் ரத்து செய்யப்பட்ட முக்கிய தொடர். இனி நடக்கவும் வாய்ப்பில்லையாம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Pak

உலகம் முழுவதும் கொரனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில்தான் அதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவைப் போல் இலங்கையிலும் கொரானா பரவலின் வேகம் அதிகரித்து வரும காரணத்தினால், அந்நாட்டில் இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஆசிய கிரக்கெட் கோப்பை தொடரை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான ஆஷ்லே டி சில்வா,

இலங்கையில் நாளுக்கு நாள் கொரானா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கு ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடரை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அத்தொடரை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவை ஆசிய கிரிக்கெட் சம்மேளம் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் கலந்தோசித்து ஒரு மனதாகதான் எடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே நடைபெறுவதாக இருந்தது, ஆனால் அப்போது கொரான பரவல் அதிகரித்து இருந்ததால் அந்த தொடரானது இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தானர, வங்க தேசம், மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்பதாகா இருந்த சூழ்நிலையில்,

Pak

தற்போது இந்த ஆண்டும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனிவரும் வருடங்களில் அனைத்து அணிகளுக்கும் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகள் இருப்பதால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது மீண்டும் 2023 ஒரு நாள் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன்தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Deepak-Chahar

இதற்கு முன்னாராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது.

Advertisement