இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பை ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருது படைத்தது. அதைத் தொடர்ந்து 2026 டி20 உலக கோப்பை 10 வருடங்கள் கழித்து இந்தியாவில் நடைபெற உள்ளது. 2016க்குப்பின் நடைபெற உள்ள அந்தத் தொடரில் இந்தியா தங்களது சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக துவங்கப்பட்ட இந்தத் தொடர் கடைசியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி கண்டதை ரசிகர்களால் மறக்க முடியாது.
இந்தியாவில் ஆசிய கோப்பை:
அதைத் தொடர்ந்து 2025 ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் வரலாற்றில் முதலும் கடைசியாக கடந்த 1990/91 ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அதன் பின் 34 வருடங்கள் கழித்து ஆசியக் கோப்பை 2025இல் இந்தியாவில் நடைபெறும் உள்ளது.
இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராக உதவும் வகையில் அந்தத் தொடர் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என்றும் ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 2027 ஆசிய கோப்பை வங்கதேசத்தில் நடைபெறும் என்றும் ஆசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் 2027 ஐசிசி உலகக் கோப்பை நடைபெறுகிறது.
எனவே அதற்கு ஆசிய தயாராகும் வகையில் 2027 ஆசியக் கோப்பை 50 ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் என்றும் ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது. இருப்பினும் அந்த தொடருக்கான அட்டவணை, மைதானங்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் 34 வருடங்கள் கழித்து இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற உள்ளது என்ற தகவல் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீனியர் வீரர்களாக இருந்தா என்ன? நான் சொன்னா பண்ணனும்.. ரோஹித் கோலிக்கு – உத்தரவிட்ட கம்பீர்
ஆனால் அந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட மாட்டார்கள். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையுடன் அவர்கள் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். எனவே டி20 தொடராக நடைபெறும் 2025 ஆசிய கோப்பையில் ரோஹித், விராட் கோலி விளையாட மாட்டார்கள். இருப்பினும் வங்கதேசத்தில் 50 ஓவர் தொடராக நடைபெற உள்ள 2027 ஆசியக் கோப்பையில் அவர்கள் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. அதில் அவர்கள் விளையாடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



