ஆசிய கோப்பை 2022 : பாகிஸ்தான் மண்ணை மிதிக்க மாட்டோம், அடம் பிடித்து சாதித்த இந்தியா – இடம், தேதிகள் இதோ

ind
- Advertisement -

ஆசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற உலகின் டாப் கிரிக்கெட் அணிகளில் யார் சாம்பியன் என்பதை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு 2 வருடத்திற்கும் ஒருமுறை ஆசிய கோப்பை நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் இதுவரை 15 தொடர்கள் நடைபெற்றுள்ளது.

asia-cup-logo

- Advertisement -

கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த ஆசிய கோப்பையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. குறிப்பாக அந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய கோப்பை 2022:
அதை தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெறுவதாக இந்த தொடர் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆசிய கோப்பை 2022 தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த வருடம் இந்த தொடரை எங்கு நடத்துவது என்பது போன்ற இறுதி முடிவை எடுப்பதற்காக இன்று ஒரு மீட்டிங்கை நடத்தியது. அதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக வரும் 2024 வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய செயலாளராக இருக்கும் ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.Ganguly

அதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் இதுநாள் வரை உறுப்பு நாடாக மட்டும் இருந்து வந்த கத்தார் கிரிக்கெட் அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முழு நேர உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அணிகள், தேதிகள், பார்மட்:
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆசிய கோப்பை தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்றில் குவைத், ஹாங் காங்க், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 அணிகள் மோத உள்ளன. இந்த தகுதி சுற்று போட்டிகள் வரும் ஆகஸ்டு 20-ஆம் தேதி முதல் துவங்குகிறது. அதில் வெற்றி பெறும் அணி 6-வது அணியாக ஆசிய கோப்பையில் பங்கு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. மேலும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வண்ணம் இந்த வருட ஆசிய கோப்பை தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்காக அந்த வருடத்தின் ஆசிய கோப்பை இதே போல 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடம் பிடித்து சாதித்த இந்தியா:
கடந்த முறை ரத்து செய்யப்பட்ட ஆசிய கோப்பை இம்முறை மீண்டும் நடைபெறுவதால் ஆசியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொடரில் அதிகபட்சமாக இதுவரை 7 கோப்பைகளை வென்ற இந்தியா ஆசிய கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 2-வது வெற்றிகரமான அணியாக இருக்கும் இலங்கை 5 கோப்பைகளை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் 2 முறை இந்த கோப்பையை வென்றுள்ளது. இந்த 3 அணிகளை தவிர வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் இந்த கோப்பையை வென்றது கிடையாது.Ramiz Raja Sourav Ganguly

முன்னதாக இந்த ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் அணியுடன் நேருக்கு நேர் கிரிக்கெட் போட்டிகளில் கூட பங்கேற்காமல் இருந்துவரும் நிலையில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் இந்த தொடருக்காக அந்த நாட்டு மண்ணை மிதிப்பதா என்ற கோட்பாட்டுடன் பிசிசிஐ இருந்து வந்தது. தற்போது இந்த தொடரில் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அடம்பிடித்தே பிசிசிஐ சாதித்து விட்டது என இந்திய கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

Advertisement