நீங்க நடிக்கிற படத்தின் கதையெல்லாம் வேற மாதிரி செமயா இருக்கு – தமிழ் நடிகரை புகழ்ந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் முன்னணி நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அவர் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர் என்றும் கூறலாம். அவ்வப்போது வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் அஷ்வின் தற்போது தனது நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷாலை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக “எஃப்ஐஆர்” என்ற படம் திரைக்கு வர உள்ளது. வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அந்த படக்குழுவினரை வாழ்த்தி அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

- Advertisement -

படத்தின் டிரைலர் பார்த்தேன். படத்தை காண காத்து இருக்க முடியவில்லை நண்பா. வழக்கம் போல உங்களுடைய கதை தேர்வு என்னை வியக்க வைக்கிறது என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால் : மிக்க நன்றி நண்பா உங்களது பந்துவீச்சு மாறுபாடுகள் மற்றும் சாதனைகளை விட இது ஒன்றும் நிச்சயம் அற்புதமானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிரிக்கெட் களத்தை மையமாக கொண்டு 2014 ஆம் ஆண்டு ஜீவா என்ற படத்திலும் விஷ்ணு விஷால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகரான இவர் திரைப்படத்தில் நடிக்க வரும் முன் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார் என்பதும் அவரது கேப்டன்சியில் அஸ்வின் விளையாடி உள்ளதையும் அஸ்வினே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தனது நண்பரின் புதிய திரைப்படம் வெளியாவதற்கு அஸ்வின் சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இப்போதும் கூட நான் சச்சினை பார்த்தே பேட்டிங் செய்கிறேன் – ஆஸ்திரேலிய வீரர் ஓபன்டாக்

நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய அஸ்வின் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement