இப்போதும் கூட நான் சச்சினை பார்த்தே பேட்டிங் செய்கிறேன் – ஆஸ்திரேலிய வீரர் ஓபன்டாக்

Stoinis
- Advertisement -

இந்தியா கண்ட மகத்தான பல கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவராக திகழும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ரோல்மாடலாகவும் உத்வேகத்தை அளிக்க கூடியவராகவும் இருந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகள், அதிக ரன்கள், அதிக சதங்கள் என பேட்டிங் துறையில் அவரின் பெயர் இல்லாத சாதனைகளே இருக்க முடியாது. 90களில் இந்தியாவிற்கு எத்தனையோ போட்டிகளில் தனி ஒருவனாக பேட்டிங் செய்து பல வெற்றிகளை தேடித் தந்த அவர் ஓய்வு பெறும் வரை இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்தார் என்றே கூறலாம்.

sachin

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் வெறும் சாதனைகளுக்காக கொண்டாடப்படவில்லை. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் 16 வயதில் காலடி வைத்து வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற அச்சுறுத்தலான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பின்னர் கிளென் மெக்ராத், பிரட் லீ, சோயப் அக்தர் போன்ற அதிரடியான உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அசால்டாக பந்தாடி ரன்களை குவித்த பெருமைக்குரியவர்.

நுணுக்கங்கள் நிறைந்த சச்சின்:
அவர் விளையாடிய காலத்தில் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகள் கூட ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற உலகின் டாப் அணிகளை திணறடிக்கக்கூடிய டாப் அணிகளாக வலம் வந்தன. அந்த காலத்தில் அது போன்ற ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 2 – 3 உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்.

sachin

அவர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்த காரணத்தினாலேயே சச்சின் டெண்டுல்கர் இன்று மட்டுமல்ல என்றுமே ரசிகர்களால் கொண்டாட கூடியவராக இருக்கிறார். ஒவ்வொரு பவுலருக்கும் ஒவ்வொரு கால சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நுணுக்கங்களை தெரிந்து வைத்திருந்ததாலேயே அந்த அளவுக்கு அவரால் வெற்றிகரமான இருக்க முடிந்தது. இதனால் “டெக்கனிக்கலி ஸ்ட்ராங் பேட்ஸ்மேன்” என அவரை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் பல முறை பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பின்பற்றும் லபுஸ்ஷேன்:
இந்நிலையில் இப்போதும்கூட சச்சின் டெண்டுல்கரை பின்பற்றியே பேட்டிங் செய்வதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் பற்றி உங்களின் கருத்து என்ன என ஒரு ரசிகர் அவரிடம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Marnus

அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு. “இப்போதும் கூட சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் பழைய வீடியோக்களை மிகவும் மகிழ்ச்சியோடு காண்பேன். அவரிடம் நம்பமுடியாத டெக்னிக் உள்ளது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது” என கூறியுள்ளார். உலகின் டாப் டெஸ்ட் பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்டராக இருக்கும் அவர் தற்போதும் கூட இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின் பற்றுகிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களை பெருமை அடையச் செய்துள்ளது.

ஸ்ட்ரைட் டிரைவ்:
சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 4 – 0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா அசத்தியது. அந்த தொடரில் 5 போட்டிகளில் 335 ரன்களை விளாசிய லபுஸ்ஷேன் ஆஸ்திரேலியாவின் வெற்றியில் பங்காற்றியதுடன் உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அந்த ஆஷஸ் தொடரின் போது கூட கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஒரு வலதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் நான் சச்சின் டெண்டுல்கரின் ஸ்ட்ரைட் டிரைவ் வாயிலாக தொடங்குவேன். அந்த ஷாட் தான் பார்ப்பதற்கு மிகவும் அழகானது. அது மிகவும் துல்லியமாக இருக்கும். அதேபோல் ரிக்கி பாண்டிங்கின் புல் ஷாட் அபாரமானது” என கூறியுள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் ட்ரேட்மார்க் ஷாட் என்றால் அது அவர் அடிக்கும் ஸ்ட்ரைட் ட்ரைவாகும். அந்த ஷாட்டை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கரும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கும் தமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் என லபுஸ்ஷேன் இது பற்றி மேலும் கூறியுள்ளார்.

Advertisement