100-ஆவது டெஸ்ட் போட்டியோடு ரிட்டயர்டு ஆகலாம்னு தோனியை கூப்பிட்டேன்.. யாரும் அறியா நிகழ்வை – பகிர்ந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 116 ஒருநாள் போட்டிகள், 65 டி20 போட்டிகள் மற்றும் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியுடன் பயணித்திருந்த அவர் அந்த தொடரின் பாதியிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்து ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார்.

தோனியின் கையால் நினைவுப்பரிசை பெற ஆசைப்பட்ட அஷ்வின் :

தற்போது 38 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி அவரை 9 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்து வாய்ப்பினையும் வழங்கி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தான் 100-ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற விரும்பியதாகவும், அந்த நூறாவது டெஸ்ட் போட்டிக்கான பரிசினை தோனியின் கைகளால் பெறுவதற்காக அவரை அழைத்ததாகவும் பலரும் அறியாத சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தர்மசாலா மைதானத்தில் நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தேன்.

அப்போது அந்தப் போட்டியுடன் நான் ஓய்வு பெறவும் முடிவு செய்திருந்தேன். இதன் காரணமாக எனக்கு நினைவு பரிசை வழங்க தோனியை அழைத்து இருந்தேன். ஆனால் அப்போது அவரால் அந்தப் போட்டிக்கு வர முடியவில்லை. அதன் பின்னரே ஆஸ்திரேலிய தொடரின் போது ஓய்வை அறிவித்தேன். ஆனால் இப்போது மீண்டும் சிஎஸ்கே அணிக்காக என்னை வாங்கி அவர் இவ்வளவு பரிசினை தருவார் என்று நினைக்கவில்லை. இதற்காக நான் நன்றியுள்ளனாக இருக்கிறேன் என அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் தோனியின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணியில் சிறப்பாக செயல்பட்டதாலே இந்திய அணிக்கு தேர்வாகி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி இருந்தார். அதிலும் தோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்த அவரை தோனி மிகவும் ஆதரித்து இருந்தார்.

இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கிடம் நேருக்கு நேராக சண்டையிட்ட வெ.இ வீரர்.. தடுத்த லாரா, அம்பயர்கள்.. நடந்தது என்ன?

இதன் காரணமாகவே அவரது கையில் நினைவு பரிசை பெற விரும்பியதாகவும் அதோடு ஓய்வு பெறவும் விரும்பியதாகவும் அஸ்வின் பகிர்ந்திருந்தார். சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட முடிவு செய்துள்ள வேளையில் இன்னும் சில ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவிட்டு அத்துடன் ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement