நியாயமா பார்த்தா நீங்க பாராட்டிருக்கணும் – உ.கோ தோல்விக்காக சலித்துக்கொள்ளும் ரசிகர்களிடம் அஷ்வின் கோரிக்கை என்ன

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்திய போதிலும் நாக் அவுட் சுற்றில் தோற்று வழக்கம் போல வெறும் கையுடன் வெளியேறியது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் கொஞ்சமும் போராடாமல் இந்தியா தோற்றது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. இத்தனைக்கும் அதிகப்படியான அழுத்தம் கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருந்தும் ஒரு நாக் அவுட் போட்டியில் நிலவும் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் இந்தியா தோற்றது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Kohli

- Advertisement -

அதனால் 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு தள்ளிப் போயுள்ளது. அதற்கு முன்பாக இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி, சூரியகுமார் போன்ற சிறப்பாக செயல்பட்ட ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து முற்றிலும் புதுமையான அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வைத்து வருகிறார்கள்.

பாராட்டமா விமர்சிக்கிறிங்களே:

குறிப்பாக இந்த தொடரில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரை அடுத்த உலக கோப்பையில் பார்க்க விரும்பவில்லை என்று முன்னாள் வீரர் சேவாக் வெளிப்படையாகவே பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார். மேலும் இந்த வீரர்கள் 35 வயதை கடந்து விட்டதால் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என மான்டி பனேசரும் பெரும்பாலான ரசிகர்களும் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் வெற்றிக்காக முடிந்தளவு போராடியும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமாக இருந்தாலும் செமி ஃபைனல் வரை தகுதி பெற்றது சாதனை தானே என்று மூத்த வீரர் அஷ்வின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

குறிப்பாக இதே உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணிலும் தென்னாப்பிரிக்கா கடைசி நேரத்திலும் அரையிறுதி கூட தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் முடிந்தளவுக்கு போராடிய இந்திய அணி செமி ஃபைனல் வரை வந்ததை சாதனையாக கருதி ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்ற வகையில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி வெற்றி பெறாததையோ அல்லது பைனலுக்கு தகுதி பெறாததை பார்த்து அனைவரும் வருத்தப்பட்டிருப்பார்கள். நான் ஒப்புக் கொள்கிறேன் அது அனைவரது நெஞ்சங்களை உடைத்திருக்கும். அதற்காக எந்த சாக்கு போக்கு சொல்லியும் உங்களை மறக்கடிக்க முடியாது. கண்டிப்பாக இது ஒரு ஏமாற்ற தருணமாகும்”

- Advertisement -

“ஆனால் அதை நினைத்துக் கொண்டிருக்காமல் நாம் முன்னோக்கி நடக்க வேண்டும். அதே சமயம் இந்த தொடர் நமக்கு அதிகமான ஏமாற்றத்தை கொடுத்தது என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் அரையிறுதியில் தோற்ற நாம் அந்த உச்சத்தை எட்டியதையும் ஒரு சாதனையாக கருதலாம். ஆனால் ஒரு இந்திய ரசிகரின் பார்வையில் இருந்தும் இந்திய அணியின் மீது அவர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளில் இருந்தும் ரசிகர்களின் ஏமாற்றத்தை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். அதே சமயம் ரசிகர்களான நீங்கள் சந்தித்த ஏமாற்றத்தை விட களத்தில் இறங்கி விளையாடிய நாங்கள் 200 – 300 மடங்கு ஏமாற்றமடைந்துள்ளோம்” என்று கூறினார்.

Ashwin

அவர் சொல்வது உண்மை தான் என்றாலும் இந்திய அணியிடம் இருக்கும் தரத்திற்கும் திறமைக்கும் இங்கிலாந்தின் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தோற்றதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. அத்துடன் சாதாரண இரு தரப்பு தொடர்களில் அதிரடியாக வெற்றி வாகை சூடும் அதே இந்தியா அணியால் அழுத்தமான ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் ஏன் வெற்றி வாகை சூட முடியவில்லை என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. மேலும் இந்த கதை ஒன்றும் இப்போது நடைபெறவில்லை 2013 வரை நடைபெற்று வருவதே ரசிகர்களின் குமுறலுக்கு காரணமாக இருக்கிறது.

Advertisement