நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரியான போட்டியில் 164 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவதாக டெல்லி அணி விளையாடியது. அப்போது சிறப்பான நிலையில் 12.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. அப்போது எப்படியாவது ஒரு விக்கெட்டை வீழ்த்த நினைத்த அஸ்வின் தவானை மான்கட் முறையில் வீழ்த்த ஓடி வந்து பந்துவீசாமல் நின்றார். ஆனால், சுதாரித்து கொண்ட தவான் கிரீஸை விட்டு நகரவில்லை. அஸ்ஹவினி இந்த செயலால் வெறுப்படைந்த தவான் அடுத்த பந்தை அஸ்வின் வீசவரும்போது கிரீஸில் நடனமாடி வெறுப்பேற்றினார். இதோ அந்த வீடியோ :
அஸ்வின் தொடர்ந்து இவ்வாறு செய்து வருவது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகிறது. இதனால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வின் ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.



