இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 105 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் அவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 212 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்.
அஷ்வின் நிகழ்த்த இருக்கும் சாதனை :
கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் முதன்மை வீரராக இன்றளவும் விளையாடி வருகிறார்.
தற்போது 38 வயதாகும் அஸ்வின் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் என்பதனால் அவரது கிரிக்கெட் கரியர் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் இது ஆஸ்திரேலியா மண்ணில் அவரது கடைசி தொடராக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் படைக்கவிருக்கும் சாதனை யாதெனில் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டு நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இதுவரை 194 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.
இவ்வேளையில் பெர்த் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஆறு விக்கெட் வீழ்த்தினால் முதல் நபராக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அவருக்கு அடுத்து நாதன் லயன் 187 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில இருப்பதினால் அவர் இந்த சாதனையை எட்ட 13 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க : புஜாரா இல்லாதது மிஸ்.. 36க்கு ஆல் அவுட்டாகியும் அடங்காத இந்தியாவை சாய்க்க இதை செய்ங்க.. பாண்டிங் அட்வைஸ்
எனவே முதல் நபராக நிச்சயம் அஸ்வின் இந்த சாதனை படைப்பார் என்பது உறுதி. அதேபோன்று முதல் இரண்டு இடங்களில் அஸ்வின் மற்றும் லயன் ஆகியோர் இருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.