Ashwin : இந்த வெற்றி அடுத்து வரப்போகும் தொடரின் வழிகாட்டுதலாக இருக்கும் – அஸ்வின் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமை

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Ragul

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : இது எங்களுக்கு எளிமையான போட்டி இல்லை. எங்கள் அணி திட்டங்கள் தற்போது பலிக்க துவங்கி உள்ளன. ஆனால், இந்த தொடரின் பிளேஆப் வாய்ப்பு எங்களுக்கு இல்லை. இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் தற்போது தயாராகி உள்ளோம். இனி அடுத்த தொடர்களில் பஞ்சாப் அணி வெற்றிகளை குவிக்க இந்த அடித்தளம் உதவும்.

Rahul

இனி அடுத்து வரப்போகும் தொடருக்காக பலமான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். எங்களது பஞ்சாப் அணி நிர்வாகம் எங்களை மதித்து விளையாட வைத்தது. நானும் பஞ்சாப் அணிக்காக சிறப்பாகவே கேப்டன்சி செய்தேன் என்றே நினைக்கிறன். வரும்காலத்தில் எங்களது அணி சிறப்பாக விளையாட இந்த சி.எஸ்.கே அணிக்கெதிரான வெற்றி உந்துதலாக இருக்கும் என்று அஸ்வின் கூறினார்.

Advertisement