இந்த ஐ.பி.எல் தொடரில் இவங்கள சமாளிக்குறது தான் கஷ்டம். இவங்க அவ்ளோ வெயிட்டான டீம் – அஷ்வின் வெளிப்படை

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணி குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Ashwin 2

இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ள அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்தவை தான். இருப்பினும் மற்ற அணிகளை காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு படி மேல் அபாயகரமானது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆகியோர் சரியான கலவையில் உள்ளனர்.

- Advertisement -

MI

கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் மும்பை அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். மற்ற அணிகளை விட மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது அனைத்து அணிகளுக்குமே சற்று கடினமாகத்தான் இருக்கும் என அஷ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.