- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரவி சாஸ்திரி சொல்லி அனுப்பிய முக்கியமான விஷயத்தை தாகூர் என்கிட்ட சொல்லவேயில்லை – அஷ்வின் பேட்டி

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை தோற்கடித்து, பெரும் சாதனை படைத்திருக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமாக விளையாடி தொடரை இழந்து விடும் என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆனால் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றதால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த இத்தொடர் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதரிடம் தனது யூடியூப் சேனலில் பேசிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

அப்போது இருவரும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அப்போது சிட்னி டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் களத்தில் ஆடிக்கொண்டிருந்த போது தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி கூறிய ஒரு டிப்ஸை வாட்டர் பாயாக வந்த ஷர்துல் தாகூர் தன்னிடம் கூறவில்லை என்று பேசியிருக்கிறார் அஸ்வின். இதுகுறித்து அவர் கூறுகையில்…..

சிட்னி மைதானத்தில் விகாரியும் நானும் ஆடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையாடியதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பிப் போய் விட்டனர். பேட் கம்மின்ஸ் பந்தில் அதிகமாக அடி வாங்கியே எங்களைத் தற்காத்துக் கொண்டோம். விக்கெட்டை இழக்காமல் இருக்க இருவரும் 10,10 பந்துகளாக ஆட முடிவு செய்தோம். திடீரென்று பேட்டிங் முனையை மாற்றிக்கொண்டோம்.‌ இதனை பார்த்த ரவி சாஸ்திரி உடனடியாக வாட்டர் பாயாக ஷர்துல் தாகூரை அனுப்பினார்.

உள்ளே வந்த ஷர்துல் தாகூர் அவர்கள் என்னிடம் வந்து ரவிசாஸ்திரி என்னிடம் நிறைய கூறினார் ஆனால் அதை நான் உங்களிடம் கூற மாட்டேன். நீங்கள் இப்படியே ஆடுங்கள் என்று ஷர்துல் தாகூர் தன்னிடம் கூறியதாக நகைச்சுவை ததும்ப பேசியிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் ரவி சாஸ்திரி வேறு விதமாக ஒரு டிப்ஸ் ஒன்றைக் கூறி அனுப்பி இருக்கிறார். ரவி சாஸ்திரி ஸ்பின்னரை எதிர்த்து அஷ்வின் ஆடும்படியும், வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விஹாரி ஆடட்டும் என்றும் கூறியதாக போட்டி முடிந்த பின்னர் ஷர்துல் தாகூர் அஷ்வினிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -
Published by