சுப்மன் கில்லுக்கு அந்த பதவி குடுத்தப்பவே சஞ்சு சாம்சன் காலி.. வேற வழியில்ல – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and Samson
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாமல் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா விளையாடியது பலரது மத்தியிலும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளானது. ஏற்கனவே துவக்க வீரராக சஞ்சு சாம்சன் அசத்தலான பார்மில் சிறப்பாக ரன் குவித்து வந்தார்.

சுப்மன் கில்லால் தான் சஞ்சு சாம்சனின் இடம் போச்சு : அஷ்வின் கருத்து

ஆனால் சுப்மன் கில்லிற்கு டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அவருக்கு மீண்டும் துவக்க வீரருக்கான இடம் கிடைத்தது. அதனால் தான் தற்போது சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் அளவிற்கு வந்துள்ளார். இவ்வேளையில் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவரை நீக்கி விட்டு மீண்டும் சஞ்சு சாம்சனை துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில்லிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்ட போதே சஞ்சு சாம்சனின் இடம் பறிபோனது என முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் ஏன் பிளேயிங் லெவனில் இல்லை என்ற விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. எப்போதெல்லாம் அவர் நீக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுகிறது.

எப்போது சுப்மன் கில்லிற்கு டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதோ அப்போதே சஞ்சு சாம்சனின் இடம் பிளேயிங் லெவனில் பறிபோனது என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில் துணை கேப்டனாக விளையாடும் ஒருவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க முடியாது. அதன்காரணமாகவே சஞ்சு சாம்சனின் துவக்க வீரருக்கான இடம் சுப்மன் கில்லுக்கு சென்றது.

- Advertisement -

அதேபோன்று தற்போதைய இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மா விளையாட காரணம் யாதெனில் : சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடி பழக்க மில்லாதவர். அதேவேளையில் ஜிதேஷ் சர்மா ஆர்.சி.பி அணிக்காக பினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடி தான் இந்திய அணியின் வாய்ப்பினை எட்டியுள்ளார்.

இதையும் படிங்க : அதை ஓவர்ரேட்டட்ன்னு கம்பீர் சொல்வது கரெக்ட் தான்.. இந்தியாவிடம் ஆழமான திறமை இருக்கு.. ஏபிடி பாராட்டு

அதன் காரணமாவே பினிஷர் ரோலிற்கு செட்டாகும் ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு குடுக்க கம்பீர் நினைத்தால் 3 ஆம் இடத்தில் அவரை விளையாட வைக்கலாம். ஏனெனில் டாப் ஆர்டருக்கு பொருத்தமான சாம்சன் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடியவர் என்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement