அதை ஓவர்ரேட்டட்ன்னு கம்பீர் சொல்வது கரெக்ட் தான்.. இந்தியாவிடம் ஆழமான திறமை இருக்கு.. ஏபிடி பாராட்டு

AB De Villiers
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய வழி காட்டுதலில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வழக்கம் போல இந்திய அணி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக அசத்தி வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த ஒயிட்வாஸ் படுதோல்விகளைச் சந்தித்தது.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் சோதனை என்ற பெயரில் அவர் செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள் தோல்விக்கு முக்கிய காரணமாகின்றன. அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் பேட்டிங் வரிசையில் அவர் அடிக்கடி மாற்றங்களை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீரின் அணுகுமுறை:

அது பற்றி கேட்டதற்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை என்பது ஓவர்ரேட்டட் என்று கம்பீர் பதிலளித்தார். அதனாலேயே வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களை 3 முதல் 8 வரையிலான இடங்களில் மாற்றி மாற்றி களமிறக்குவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் என்றும் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை வளைவுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற கௌதம் கம்பீரின் கருத்து சரியானது என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லிர்யஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பேட்டிங்கை மாற்றுவதற்குத் தேவையான ஆழமான திறமை இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஏபிடி வரவேற்பு:

“கௌதம் கம்பீரின் குறிப்பிட்ட சில கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் நான் எப்போதும் பேட்டிங் வரிசையில் மிதப்பதை விரும்புகிறேன். அது நல்ல வரிசை. ஏனெனில் உங்களால் வீரர்களின் வேலையில் அதிகம் விளையாட முடியாது. அது டாப் 3, 4 – 5, டெய்ல் எண்டர்கள் என்ற 3 வகையானப் பிரிவை போல் இருக்கும். எனவே நீங்கள் அதில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க:அன்போடு திட்டும் ரோஹித் பாய் மாதிரி யாராவது இதை செய்வாங்களா? கோலி பற்றியும் ஜெய்ஸ்வால் பேட்டி

“சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையை விளையாட வேண்டும். அது டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக வேலை செய்யும். டி20 மிகவும் பரபரப்பு மிகுந்த ஃபார்மட். அதில் இந்திய அணி நிலையாக அசத்துகிறது என்றால், ஏதோ ஒரு கோணத்தில் அவர்கள் சரியாகச் செல்கிறார்கள் என்று அர்த்தமாகும். அது கிரிக்கெட்டின் ஆழமான திறமையையும் சொல்கிறது” என்று கூறினார்.

Advertisement