இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கான்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியின் முதல் நாளில் 36 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட வேளையில் பெய்த கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டாவது போட்டிக்கான முடிவு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது.
ரோஹித் கொடுத்த நம்பிக்கை தான் வெற்றிக்கு காரணம் :
இந்நிலையில் போட்டியில் நான்காம் நாளான அன்று இந்திய அணி வங்கதேச அணியை விரைவில் வீழ்த்தியதோடு பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அவரைகளை சொற்ப ரன்களில் சுருட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்ட திட்டம் என்ன? அவர் வீரர்களிடம் என்ன பேசினார்? என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வங்கதேச அணி ஆல் அவுட் ஆன பின்னர் ஓய்வறையில் அனைவரையும் அழைத்த ரோகித் சர்மா ஒரு சிறிய மீட்டிங்கை ஏற்பாடு செய்தார்.
அந்த மீட்டிங்கில் நாம் அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 400 ரன்கள் குவிக்க வேண்டும் என்று கூறினார். ஒருவேளை நாம் நினைத்தது போல் நடக்காமல் போனாலும் 200 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தால் கூட பரவாயில்லை. நம்மால் நிச்சயம் இந்த போட்டியில் முடிவை ஏற்படுத்த முடியும். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.
அதன் பின்னர் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது போன்றே தான் களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அவர் அதிரடியாக செயல்பட்டார். ஒரு கேப்டனே இப்படி பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படும்போது பின்னால் வரும் நாமும் அந்த வழியை தொடர வேண்டும். அதன் காரணமாகவே இந்திய அணி மிக அதிரடியாக விளையாடி அசத்தலான ரன் குவிப்பை வழங்கியது.
இதையும் படிங்க : 14க்கு 15.. அடிச்சா செஞ்சுரி தான்… கம்பேக் கனவில் ரஹானேவுக்கு நேர்ந்த சோகம்.. சர்பராஸ் கான் அபாரம்
அதன் பின்னர் பந்துவீச்சில் நாங்கள் எங்களது பணியை சிறப்பாக மேற்கொண்டோம். அதன் காரணமாகவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. எத்தனையோ முறை நாம் எதிரணியின் 20 கிரிக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறோம். ஆனால் இம்முறை வங்கதேச அணியை வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் நமது அணி பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்படும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.